SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எல். முருகன், அண்ணாமலை, எச். ராஜா, குஷ்பூ, வானதி சீனிவாசன்.. பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் பின்னடைவு!!

2021-05-02@ 10:31:08

சென்னை : தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது அடுத்தடுத்த சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களில் போட்டியிடுகிறது.

*அரவக்குறிச்சியில் போட்டியிடும் அண்ணாமலை பின்னடைவில் இருக்கிறார். அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் இளங்கோ முன்னிலை வகிக்கிறார்.

*தாராபுரத்தில் போட்டியிடும் எல்.முருகன் பின்னடைவு வகிக்கிறார்.

*காரைக்குடியில் மண்ணின் மைந்தன் ஹெச்.ராஜா பின்னடைவை சந்தித்திருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 2805 வாக்குகள் பெற்றுள்ளார். ஹெச்.ராஜா 1393 வாக்குகள் பெற்றுள்ளார்.

*ஆயிரம் விளக்கில் களமிறங்கிய குஷ்பு திமுக வேட்பாளர் எழிலனை விட பின்னடைவில் இருக்கிறார்.எழிலன் 3330 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், குஷ்பு 1393 வாக்குகள் பெற்றுள்ளார்.

*கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 70 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை - கமல்ஹாசன், வானதி ஸ்ரீனிவாசனுக்கு பின்னடைவு

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-1000-rains

    சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

  • girlss_saydi

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

  • amesaann11

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

  • marina-sculptures22

    மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

  • 5starrrr

    5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்