SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குருதேஜ் பகதூரின் 400வது பிறந்த தினம்: பாதுகாப்பின்றி சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி

2021-05-01@ 11:57:55

டெல்லி: டெல்லி குருத்வாராவில் குருதேஜ் பகதூரின் 400வது பிறந்த தினத்தில் பிரதமர் மோடி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி சென்று சாமி தரிசனம் செய்தார். சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு தேஜ் பகதூரின் 400வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  முகலாய பேரரசர் அவுரங்கசீப் ஆட்சியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்ட அவரது பிறந்த தினத்தில் சீக்கியர்கள் பல்வேறு பகுதிகளிலும் வழிபாடு நடத்தி வருகின்றனர். டெல்லியில் அமைந்துள்ள சிஸ் கஞ்ச் சாஹிப் குருத்வாராவில் பிரதமர் மோடி இன்று காலை வருகை தந்துள்ளார்.  

அவரை குருத்வாரா நிர்வாகிகள் வரவேற்று சிறப்பித்தனர். இதன்பின்னர் பிரதமர் மோடி, தேஜ் பகதூரின் 400வது பிறந்த தினத்தினை முன்னிட்டு குருத்வாராவில் வழிபாடு மேற்கொண்டார். பிரதமரின் வருகையை முன்னிட்டு அவர் செல்லும் வழியில் பலத்த பாதுகாப்பு எதுவும் செய்யப்படவில்லை. இதேபோன்று பிரதமருக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் பிரதமர் சாமி தரிசனத்துக்கு பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jammu-flood-29

    ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

  • sand-storm-china

    அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

  • plastic-vaste-girl

    கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

  • farmeee112

    "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்