SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா டெஸ்ட் மூலம் எதிர்கட்சி முகவர்களை முடக்க நினைக்கும் இலை கட்சியின் தந்திரம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-04-29@ 00:54:40

‘‘காபந்து மந்திரி சிபாரிசால் சிறைக்கு போகாமல் தப்பிய பெண் அதிகாரி பற்றிச் சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மனுநீதி சோழன் ஆண்ட மாவட்டமான அமைச்சரின் சொந்த ெதாகுதியில் அதிக லோடு ஏற்றி சென்றது தொடர்பாக அந்த லாரியை விடுவிக்க அதன் உரிமையாளரிடம் ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் தாசில்தார் சமீபத்தில் கைதானார். இது குறித்த தகவல் காபந்து மந்திரியின் காதுக்கு கொண்டு செல்லப்பட்டதும் அடுத்த சில மணிநேரத்தில் விடுவிக்கப்பட்டாராம். ஆனால் புதிதாக உருவான மாவட்டத்தில் பட்டாவுக்காக 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டாராம். இரண்டு பேரையும் பிடித்தது லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள ஒரு நேர்மையான அதிகாரியாம்... ஆனால் காபந்து மந்திரியின் பிரஷர் தாங்க முடியாமல் ஒருவரை வழக்கில் இருந்தே விடுவித்துவிட்டார்களாம். இது அந்த மாவட் வருவாய்த்துறை ஊழியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வாக்கு எண்ணிக்கையில் இலை கட்சி ஏதோ திட்டம் போட்டிருக்காமே..’’
‘‘சட்டமன்ற தொகுதிவாரியாக சில தேர்தல் அதிகாரிகளை வசியம் செய்து வைத்திருக்கிறார்களாம். அந்த திட்டம் பெயிலியர் ஆனா என்ன செய்வது என்று ரூம் போட்டு இலை கட்சிக்காரங்க யோசிச்சாங்க. இதுக்காக சாதகமான அதிகாரிகளையும் கைக்குள்ள போட்டு வெச்சிருக்காங்களாம்.
எலக்‌ஷன் கவுன்டிங்ல ஈடுபடுற ஏஜென்டுகளுக்கு கொரோனா டெஸ்ட், தடுப்பூசி போட்டுக்கணும்னு எலக்‌ஷன் கமிஷன் சொல்லியிருக்கு. இதனால கட்சிக்காரங்க டெஸ்ட் எடுக்க அந்தந்த ஏரியால முகாம் ஏற்பாடு செஞ்சாங்க.
அங்க இலைகட்சிக்காரங்களுக்கு, கடமைக்கு பட்டும்படாம டெஸ்ட் எடுக்குறாங்களாம். ஆனா மற்ற கட்சியினரை டெஸ்ட் என்ற பெயர்ல ஒரு வழி செய்யறாங்களாம். இப்படி எந்தெந்த வழியில தில்லாலங்கடி வேலை செய்யணுமோ அத்தனையும் செய்றாங்களாம் இலைகட்சிக்காரங்க... அதாவது வலுவான முகவரை கவுன்டிங் போது வராம தடுப்பது தான் இலையின் தற்போதையை பிளான்னு பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விடாகண்டன்னு சொல்றாங்களே... அவங்க என்ன செய்வாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அதிகாரியாக பணியாற்றியவரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒருமுறை கையும் களவுமாக மடக்கிட்டாங்க. இதனால சில நாட்கள் அமைதியாக இருந்தாங்க. லஞ்சம் வாங்கி ருசி கண்ட பூனையான அவர் மீண்டும் கரன்சி கறக்க ஆரம்பித்தாராம். குமரியை உள்ளடக்கிய மண்டல பறக்கும் படையில் இடம் பிடித்த அவர், தனது உறவினர் உள்பட இரு வாலிபர்களுடன் ஆய்வு  என்ற பெயரில் பணம் பார்க்கிறாராம். ராதாபுரம் தாலுகாவிலிருந்து குமரி வழியாக கேரளாவிற்கு விதி மீறி, அதிக பாரத்துடன் பறக்கும் டாரஸ் லாரிகளை இந்த அதிகாரி மடக்கி, உரிமையாளர்களிடம் லட்ச கணக்கில் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டாம். ஏற்கனவே பலருக்கு கப்பம் கட்டும் உரிமையாளர்கள் இதனால்,  கொந்தளித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார்  செய்துள்ளனர். இது எதையும் கண்டுகொள்ளாமல், புகார்கள் காரணமாக  எப்படியும் முழு பணிக்காலத்தையும்   முடிக்க  விடமாட்டார்கள். இதனால், முடிந்த வரை சுருட்டி வாழ்க்கையில்  செட்டிலாகி விடுவேன். உயர் அதிகாரிகள் துணை இருப்பதால்,  உடனடியாக  தன்னை எதுவும் செய்ய முடியாது என்கிறாராம்... லஞ்ச ஒழிப்பு துறை அவங்க வேலையை செய்யட்டும்... நான் என் வேலையை செய்யறேன்...’’ என்று கூலாக சொல்லி சிரிக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஸ்டெர்லைட் ஆலையால் தூக்கம் தொலைத்த தூத்துக்குடி அதிகாரிகளை பற்றி ெசால்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கி சூடுக்கு பலியான பின்னர் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆனால், ஆலையை திறக்க வேதாந்தா நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் வேதாந்தா நிறுவனத்துக்கு கை கொடுத்துள்ளது. அதாவது, கொரோனா நோயாளிகளுக்கு இலவச ஆக்சிஜன் என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலை முடிவு செய்தது. தற்போதைய ஆக்சிஜன் தேவையின் அவசர, அவசியம் கருதி கோர்ட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்துள்ளது. எனினும் ஆக்சிஜன் தயாரிப்பு என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் கால் ஊன்றி விடுமோ என்பதுதான் தூத்துக்குடி மக்களின் அச்சமாக உள்ளது. துப்பாக்கி சூட்டின் வடு தூத்துக்குடி மக்கள் மத்தியில் ஆறாத ரணமாக உள்ளது. ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக நிம்மதியாக இருந்த அதிகாரிகளுக்கு தற்போது தூத்துக்குடியில் நிலவி வரும் பதற்றம் தூக்கத்தை கெடுத்துள்ளது. பண்டாரம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தை துவங்கியுள்ளனர். இந்த விவகாரத்தை வருவாய் துறையும், போலீசும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. உளவுத் துறையினரும் ஸ்ெடர்லைட் விவகாரம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க உஷார்படுத்தப்பட்டுள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.    

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்