SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏடிபி தரவரிசை: மீண்டும் 2ம் இடத்தில் ரஃபேல் நடால்

2021-04-27@ 16:49:45

பார்சிலோனா: ஸ்பெயினின் டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால், பார்சிலோனாவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம், ஏடிபி தரவரிசையில் மீண்டும் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். நேற்று முன்தினம் பார்சிலோனாவில் நடந்த பார்சிலோனா ஓபன் டென்னிஸ் பைனலில் 3 செட்களில் போராடி, கிரீஸ் வீரர் சிட்சிபாசை, ரஃபேல் நடால் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவர் 12வது முறையாக பார்சிலோனா ஓபன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் இந்த வெற்றியின் மூலம் ஏடிபி தரவரிசையில் மீண்டும் அவர், 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் 2ம் இடத்தில் இருந்த நடால், 6 வாரங்களுக்கு முன்னர், ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவிடம் அந்த இடத்தை இழந்தார். தற்போது பார்சிலோனா வெற்றியின் மூலம் 9,810 புள்ளிகளுடன் 2ம் இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். மெட்வடேவ் 9,700 புள்ளிகளுடன் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 11,963 புள்ளிகளுடன் முதலிடத்தில் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் உள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • robo-student-scl-20

    நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது மாணவருக்கு பதிலாக பள்ளிக்கு செல்லும் ரோபோ..!!

  • oil-spill-peru-20

    பெரு நாட்டில் எண்ணெய் கசிவு காரணமாக கடல் பகுதி பாதிப்பு!: தங்க நிறத்தில் ஜொலித்த கடற்கரை கறுப்பு நிறத்தில் காட்சி..!!

  • af-earthquake-19

    ஆப்கனுக்கு மற்றொரு அடி! அடுத்தடுத்து நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி, பலர் படுகாயம்..!!

  • Thaipoosam

    ஶ்ரீ பத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கோலாகலம்

  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்