SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட்டை தவிர வேறு நிறுவனமே தமிழகத்தில் இல்லையா?..: கமல்ஹாசன் கேள்வி

2021-04-26@ 18:29:58

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதில் உடன்பாடில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் சூழலில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற ஆக்சிஜனின் தேவை தற்போது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் சில நாட்களுக்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதாவது, தங்களது நிறுவனத்தில் உள்ள இரண்டு ஆக்சிஜன் தயாரிக்கும் கலன்களை மட்டும் பயன்படுத்தி இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் நாளொன்றுக்கு திரவ மற்றும் வாயு நிலையிலுள்ள ஆக்சிஜன் 1050 டன் உற்பத்தி செய்து அதனை அருகிலிருக்கும் மருத்துவமனைகளுக்கும், மாநிலத்தின் பிற மருத்துவமனைகளுக்கும் இலவசமாக வழங்க முடியும் என தெரிவித்து இருந்தது.

இதனால் உச்சநீதிமன்றம், தமிழக அரசு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து ஆலோசிக்க வலியுறுத்தியது. இதனையடுத்து, இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த  கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் 4 மாதங்களுக்கு மட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதனால் தமிழக அரசு அடுத்த 4 மாதங்களுக்கு மட்டும் வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபட அனுமதி வழங்கியது.

 இந்நிலையில், தமிழக அரசு வழங்கிய அனுமதிக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட்டை தவிர வேறு நிறுவனமே தமிழகத்தில் இல்லையா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கொரோனா காலத்தில் போராட்டத்திற்கான விதையைத் தூவிடும் இந்த முடிவை தமிழக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்