SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2வது திருமணம் செய்து பெண்ணிடம் மோசடி: டிரைவருக்கு போலீஸ் வலை

2021-04-22@ 02:23:41

சென்னை: ராமாபுரம் ராயலா நகரை சேர்ந்தவர் அனுசுயா(31). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், “எனது பெற்றோர் ஆன்லைன் திருமணம் தகவல் மையத்தில் எனது புகைப்படத்தை பதிவு செய்து வரன் பார்த்தனர். அப்போது மஞ்சு மீனா என்பவர் எனது பெற்றோரை தொடர்பு கொண்டு கார் டிரைவராக எனது சகோதரன் லோகநாதனுக்கு பெண் பார்த்து வருகிறோம். உங்கள் பெண்ணை எங்கள் குடும்பத்திற்கு பிடித்துள்ளது. நீங்கள் சம்மதித்தால் நாங்கள் வந்து பெண் பார்க்கிறோம் என்று கேட்டுள்ளார்.

பிறகு நேரில் வந்து பார்த்து பெண் பிடித்த உடன் திருமணம் ஏற்பாடுகள் செய்யலாம் என்று முடிவு செய்தனர். எனக்கு எனது பெற்றோர் 10 சவரன் நகை மற்றும் ₹1 லட்சம் பணம் வரதட்சனையாக கொடுத்தனர். அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி கும்பகோணத்தில் திருமணம் நடந்தது. பின்னர் நாங்கள் இருவரும் விருகம்பாக்கம் காந்தி நகரில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தோம். கடந்த பிப்ரவரி மாதம் வெளியூர் சென்று வருவதாக கூறி சென்ற கணவர் லோகநாதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் எனது கணவரின் பெற்றோரிடம் ெசன்ற கணவர் குறித்து விசாரித்தபோது,

அவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. முதல் மனைவி ஆந்திராவில் வசித்து வருவதும் தெரியவந்தது.அதை தட்டி கேட்ட என்னை லோகநாதன் குடும்பத்தார் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே முதல் திருமனத்தை மறைத்து இரண்டாவதாக என்னை திருமணம் செய்து மோசடி செய்த லோகநாதன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறியிருந்தார். அதன்படி மகளிர் போலீசார், லோகநாதன், அவரது தந்தை அழகப்பன், தாய் மங்கையர்கரசி, தங்கை மஞ்சு மீனா ஆகியோரை தேடுகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

 • rose-shaped-coral-21

  என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

 • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

  திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

 • Marinaa

  சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்