SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மபி.யில் கணவருக்கு இறுதிச் சடங்கு சீனாவில் இருந்து வீடியோவில் பார்த்து கதறி அழுத மனைவி

2021-04-22@ 00:29:48

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்தவர் மனோஜ் சர்மா. இவர் தனது மனைவியுடன் சீனாவில் தங்கி வங்கியில் பணியாற்றி வந்தார். சமீபத்தில், இவர் இந்தூர் வந்தார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாயன்று உயிரிழந்தார். இது குறித்து சீனாவில் இருக்கும் அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று அவரது உடலை எரியூட்டுவதற்காக சீனாவில் இருக்கும் குடும்பத்தினரிடம் இருந்து ஆன்லைனில் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது. அதன் பிறகு, அவரது உடலை சமூக சேவகர் ஒருவர் எரியூட்டினார். கணவரின் இறுதி சடங்கை அவரது மனைவி சீனாவில் இருந்து வீடியோ கால் மூலமாக பார்த்து கதறி அழுதார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்