SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

2021-04-18@ 01:41:02

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தாண்டாம்பாளையம் ரோடு பாரதி நகரை சேர்ந்தவர் ஜெகன் (19). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2019 பிப்ரவரி 20ம் தேதி 4 வயது சிறுமியை தூக்கி சென்று வீட்டில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுபற்றிய புகாரின்படி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஜெகனை கைது செய்தனர். இந்த வழக்கை ஈரோடு மகிளா நீதிமன்ற நீதிபதி மாலதி விசாரித்து, ஜெகனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பாளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டு தொகையை தமிழக அரசு ஒரு மாதத்தில் வழங்கவும் பரிந்துரைத்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்