SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலை கட்சியினரை கிராமத்துக்கு அழைத்து ‘டோஸ்’ விடும் எடப்பாடி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-04-17@ 01:33:30

‘‘இடைப்பாடி கிராமம் இல்ல...  இடைஞ்சல்பாடி கிராமமாக மாறி வருவதாக இலை கட்சியினர் புலம்பி வருவதை சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சொந்த  ஊரான மாங்கனி நகருக்கு தமிழக விவிஐபி கடந்த 2 நாளுக்கு முன்பு வந்தாராம்.  அவர் ஒருநாள் மட்டும் சிட்டியில் உள்ள வீட்டில் இருந்த நிலையில்,  அடுத்தநாளே சொந்த கிராமத்துக்கு  சென்று விட்டாராம். அங்கு  ஓய்வெடுத்தபடியே, மாவட்டம் வாரியாக இலைக்கு விழுந்த வாக்குகள் மற்றும்  வெற்றி நிலவரம் பற்றி ஒவ்வொரு மாவட்டத்திடமும் விசாரித்து வர்றாராம்.

அப்போது  பல மா.செ.க்களுக்கு டோஸ் விழுவதாகவும் கட்சி முக்கிய நிர்வாகிகள்  பேசிக்கிறாங்க. இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் மாங்கனி மாவட்டத்தில்  தங்கியிருந்து, எங்கெல்லாம் வீக் ஆனோம், அதற்கு என்ன காரணம் என்ற விவரங்களை  எல்லாம் தரவ்வா சேகரித்துவிட்டு, நிர்வாகிகள் மாற்றத்தை கட்சியில் ஏற்படுத்த  இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கு. குறிப்பா மேற்கு மற்றும் தென்  மாவட்டங்களில் பலருக்கு மா.செ. பதவி கூட பறிபோகுமுனு பேச்சு ஓடிகிட்டு  இருக்கு. இதை வைத்துதான் வரும் போன் கால்களை கொண்டு, இது இடைப்பாடி போன் இல்லை... டோஸ் விழும் இடைஞ்சல்பாடி போன் என்று நிர்வாகிகள் நடுங்குறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சேத்துபட்டா இல்ல சொத்து சேர்க்கும் பட்டா என்று திணறும் வகையில் பத்திரப் பதிவில் ஏகத்துக்கும் சம்பாதிக்கிறார்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தீப மாவட்டத்தில்தான் பட்டுனு முடியற ஊர்ல போளூர் சாலையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் தான் இந்த கூத்து நடக்கிறது. இங்கு தங்களது வீடுகள், நிலங்களை பதிவு செய்வதற்கு பெரும்பாடாகி விடுகிறதாம் மக்களுக்கு. பத்திரப்பதிவு நடந்தால் 24 மணி நேரத்தில் தர வேண்டிய பத்திரத்தை தர மறுத்து அலைக்கழிப்பதும், களப்பணி ஆய்வு செய்து பத்திரங்களை திரும்பப் பெறுவதில் சிக்கல்  உள்ளதால், மேலதிகாரியிடம் உத்தரவு பெற வேண்டும் என்று கூறுகிறார்களாம். குறிப்பாக இந்த அலுவலகத்தில் உள்ள அருணோதயமான அதிகாரி, இங்கு எல்லாம் நான்தான் என்று கூறி, பதிவு முடிந்த பின்னர் பத்திரங்களை ஒப்படைப்பதில் டார்ச்சர் செய்கிறாராம். மேலும் பத்திர எழுத்தர்கள் மூலமாக சார்பதிவாளர் விடுப்பில் செல்லும்போது அவர் செய்யாத பதிவை, இவர் செய்து கல்லா கட்டி விடுகிறாராம்.

இதற்காக 200 முதல் 500 வரையே வசூல் செய்ய வேண்டிய தொகையை 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மதிப்புக்கு ஏற்றவாறு வசூல் செய்து விடுகிறார்களாம். இதில் தடை விதிக்கும் தடையான  சொத்துகளையும், அரசியல்வாதிகள் அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு முறைகேடாக பத்திரப்பதிவு செய்து தருகின்றனர். இதற்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறுகிறதாம். எப்போதுமே இந்த அலுவலகம் புரோக்கர்கள், பத்திர எழுத்தர்களின் பிடியிலேயே உள்ளதாம். அந்த அருணோதயமானவர் கண்டுகொள்வதில்லையாம். இவர்களின் இந்த அட்டகாசம் பொறுக்க முடியாமல் குறிப்பிட்ட அரசியல் கட்சி ஒன்று போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘‘குழாய் அடி சண்டையாக மாறிப்போன வாட்ஸ் அப் குரூப் பற்றி சொல்லுங்க... என்ன திட்டறாங்க... என்ன ரகசியம் வெளியாகும்...’’ என்று ஆர்வமுடன் கேட்டார் பீட்டர் மாமா.

‘‘குமரி  கிழக்கு மாவட்டத்தில் குக்கர் கட்சியின்  வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து  பலரையும் முக்கிய நிர்வாகி நீக்கி வருகிறாராம். இது குழாய் அடி சண்டையை மிஞ்சும் அளவுக்கு இருக்காம். விஷயத்தை சொல்றேன் கேளுங்க. குரூப்பில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் சிலர் அந்த நிர்வாகி செய்த பல  உள்ளடி வேலைகளை சமூக வலைதளங்களில் பரப்ப விடுவோம் என மிரட்டல் விடுத்து  வர்றாங்க. இன்னொரு நிர்வாகி, என்னிடம் வாங்கிய பணத்தை முதலில்  கொடுங்கள். பின்னர் என்னை நீக்குங்கள் என்று வாட்ஸ் அப்பில் பதிலடி கொடுத்தாராம்.

சட்டமன்ற தேர்தலில் நீங்கள் செய்த கூத்துக்களை வெளியே சொன்னால் உங்க நிலைமை  என்னவாகும் என்றும் பல முனைகளில் அம்புகள்போல பதிவுகள் வந்த வண்ணம் உள்ளதாம். குமரியில் குக்கரின்  நிலையை இந்தளவுக்கு மோசமாக்கி விட்டு, இப்போது எங்களை வாட்ஸ் அப்  குரூப்பில் இருந்து நீக்குகிறார். வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து இல்ல, முடிஞ்சா கட்சியில் இருந்து நீக்கி பாருங்க என்ற பதிலடியால் முக்கிய  நிர்வாகி ஆடிப்போய் இருக்கிறாராம். எந்த நேரத்தில் எதை வாட்ஸ் அப்பில்  போடுவாங்கனு தெரியாமல்  கலங்கி போய் உள்ளாராம்...’’ என்றார். விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்