தீவிரமடையும் கொரோனா தொற்று!: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..!!
2021-04-16@ 10:32:31

டெல்லி: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசின் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் நோயாளிகளின் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பினாலும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதற்கு ஒரே தீர்வு கொரோனா தடுப்பு மருந்து என மருத்துவ விஞ்ஞானிகள் கூறியதை அடுத்து தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரிக்க மராட்டிய அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிதீவிரமடைந்துள்ள நிலையில், மராட்டிய மாநிலத்தில் தான் அதிகளவில் பரவி வருகிறது. ஆனால் கொரோனா பரவலை தடுத்து நிறுத்த மத்திய அரசு போதிய அளவில் தடுப்பூசிகளை விநியோகிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய மராட்டிய அரசு, தடுப்பூசி போடும் மையங்களை மூடி வந்தது. இதைத்தொடர்ந்து, மராட்டியத்தில் கோரிக்கையை ஏற்று பாரத் பயோடெக் நிறுவன தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள அம்மாநிலத்தில் உள்ள ஹாஃப்கைன் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியிருக்கிறது.
உள்நாட்டு தொழில்நுட்ப பரிமாற்றத்தின் அடிப்படையில் பாரத் பயோடெக் கோவாக்சின் கொரோனாயை தயாரிக்க மத்திய அரசும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகமும் மும்பையில் உள்ள ஹாஃப்கைன் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக மராட்டிய முதலமைச்சரின் பிரத்யேக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மராட்டிய அரசின் கோரிக்கையை நிறைவேற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மகாராஷ்டிராவில் 4 தொழிலதிபர்கள் தொடர்புடைய இடங்களில் ஐ.டி. ரெய்டு: கணக்கில் வராத ரூ.390 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்..!!
2 ஆண்டுகளுக்கு பின் உள்நாட்டு விமான கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நீக்கிய ஒன்றிய அரசு: ஆக.31 முதல் அமல்..பயணிகள் கவலை..!!
இந்தியாவில் ஒரே நாளில் 16,299 பேருக்கு கொரோனா... 53 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!
எல்லையில் பதற்றம்; காஷ்மீர் ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல்: இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம்
தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தரக் கூடாது என்று உத்தரவிடவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்
உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்: 27ம் தேதி பதவியேற்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!