SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தஞ்சை மாவட்டத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் உரங்கள் பழைய விலையிலேயே வாங்கலாம்: கூடுதல் விலைக்கு விற்றால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை என அதிகாரி எச்சரிக்கை

2021-04-15@ 20:33:11

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் பழைய விலையிலேயே விவசாயிகள் வாங்கலாம். அதிக விலைக்கு விற்றால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை வேளாண் இணை இயக்குனர் ஜெஸ்டின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சை மாவட்டத்தில் தற்போது கோடை நெல் மற்றும் முன்பட்ட குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் விவசாயிகளுக்கு தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

யூரியா 9 ஆயிரம் டன், டிஏபி 1,700 டன், காம்பளக்ஸ் 4,800 டன், பொட்டாஷ் 4 ஆயிரம் டன் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உரங்களின் இருப்பு, உர விலை உயர்வுக்கு முந்தைய இருப்பாக உள்ளதால் விவசாயிகள் இதை பழைய விலையிலேயே வாங்கி பயனடையலாம். விலை உயர்த்தப்பட்ட உர நிறுவனங்களிடமிருந்து தஞ்சை மாவட்டத்தில் பூதலூர் வட்டாரத்துக்கு மட்டும் புதிய விலையில் உர இருப்பு பெறப்பட்டுள்ளது. மேலும் வரும் வாரத்தில் 3,000 டன் டிஏபி உரம் புதிய விலையில் இருப்பு வைக்கப்படும். எனவே விற்பனை நிலையங்களில் ஏற்கனவே இருப்பில் உள்ள உரங்களை விவசாயிகள் வாங்கும்போது உர மூட்டைகள் மீது அச்சடிக்கப்பட்டுள்ள விலையை பார்த்து உறுதி செய்த பின்னர் அதற்குரிய தொகையை கொடுத்து பெற்று கொள்ளலாம்.

உர மூட்டைகள் மீது விற்பனை விலை அழிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ உடனடியாக தங்களது வட்டார வேளாண்மை அலுவலர்கள் அல்லது வேளாண்மை உதவி இயக்குனரிடம் (தரக் கட்டுப்பாடு) தகவல் அளிக்கலாம். விவசாயிகளுக்கு மானிய விலை உரங்களை முனைய கருவி மூலம் அவர்களின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகையை தவறாமல் பராமரிக்க வேண்டும். கூடுதல் விலைக்கு மற்றும் உரிய ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்