SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதலுக்கு பெண்ணின் தாய் எதிர்ப்பு பெங்களூரு காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை

2021-04-14@ 00:04:23

சென்னை: சென்னை சித்தாலப்பாக்கம் அரசன்கழனி மெயின் ரோட்டில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில், நேற்று முன் தினம் இரவு, இளம்பெண்ணும், வாலிபரும் வாயில் நுரைதள்ளிய நிலையில் இறந்துகிடந்தனர். இதனைப் பார்த்த பொதுமக்கள், பெரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு, தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ‘விஷமருந்தி இறந்து கிடந்தவர்கள் பெங்களூரைச் சேர்ந்த அபினாஷ் (30) மற்றும் அவரது அத்தை மகள் பல்லவி (21). பெங்களூர் ஆர்.கே.புரத்தைச் சேர்ந்த பிகாம் பட்டதாரிகளான இருவரும் கடந்த 2 வருடமாக, காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பல்லவியின் தாய், காயத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன், சென்னை சித்தாலப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள அபினாஷின் தங்கை கலைவாணி வீட்டிற்கு வந்து தங்கியுள்ளனர். இதனைத் தெரிந்துகொண்ட பெண்ணின் தாய் காயத்ரி, செல்போனில் அவர்களை தொடர்பு கொண்டு, கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்நிலையில், நேற்று  முன் தினம் இரவு, பெங்களூரு செல்வதாக கலைவாணியிடம் சொல்லிட்டு சென்ற, அபினாஷும், பல்லவியும் ஏற்கனவே, தாங்கள் வாங்கி வைத்திருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்