SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேசிய ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி மதுரை மாணவர் அசத்தல்

2021-04-12@ 14:07:11

மதுரை: தேசிய ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி விளையாட்டு போட்டியில், மதுரை மாணவர் சாதித்ததால் 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
சண்டிகர் மாநிலத்தில் தேசிய ஸ்கேட்டிங் போட்டி இறுதி சுற்றுகள் நடந்தன. இதில் தமிழ்நாடு ஸ்கேட்டிங் குழுவின் சார்பில், மதுரை மகாத்மா  மாண்டிச்சேரி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவன்  ஜெய்வர்ஷன் வெற்றி பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார். இவர் 5 வயது முதலில் இருந்தே ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்று வருகிறார்.

மாவட்ட அளவிலான போட்டியில் இரண்டு முறை பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். தற்போது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு குழுவிற்கு விளையாடச் சென்று வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். பதக்கம் பெற்ற மாணவனை தமிழ்நாடு ஸ்கேட்டிங் சங்கம், பயிற்சியாளர் சந்தானம் ஆகியோர் பாராட்டினர். தமிழ்நாடு அணிக்கு 12 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • karnataka-schools-25

    20 மாதங்களுக்கு பின் கர்நாடகத்தில் தொடக்க பள்ளிகள் திறப்பு!: ஆர்வமுடன் பள்ளி செல்லும் மழலைகள்..!!

  • wheel-uae-25

    250 மீ. உயரம்...1,750 பேர் பயணிக்கலாம்!: உலகிலேயே மிகப்பெரிய ராட்டினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறப்பு..!!

  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்