SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் உச்சமடையும் கொரோனா... ஒரே நாளில் 1,52,879 பேருக்கு தொற்று; 839 பேர் பலி...பீதியில் மக்கள்

2021-04-11@ 10:05:41

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.69 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதே போல், பாதிப்பு 1.33 கோடியை  தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 1,52,879 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,33,58,805 ஆக உயர்ந்தது.

* புதிதாக 839 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,69,275 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 90,584 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,20,81,443 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11,08,087 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 90.44% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.27% ஆக அதிகரித்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 8.29% ஆக அதிகரித்துள்ளது.

* இதுவரை இந்தியாவில் 10,15,95,147 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 35,19,987 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்