காங்கேயம் அருகே பழுதடைந்த சாலையால் விபத்து ஏற்படும் அபாயம்
2021-04-09@ 15:51:14

காங்கயம்: காங்கயம் - கோவை சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த சாலையில் தினமும் கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் காங்கயம் - கோவை சாலையில் உள்ள இந்தியன் வங்கி (காடையூர் கிளை) அருகே, இந்த சாலையின் நடுவே பழுதடைந்து பள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அவ்வப்போது கீழே விழுந்து சென்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.
எனவே போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில், சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று பார்விட்டு பழுதடைந்த இந்த சாலையை சரிசெய்து, சீரான வாகன போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கிணத்துக்கடவுக்கு வராமல் பாதியில் திரும்பும் தனியார் டவுன் பஸ்கள்: பயணிகள் பரிதவிப்பு
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து துவங்கியது: கடந்த ஆண்டைவிட வரத்து அதிகம்
கிராமப்புறங்களில் ரோட்டோரம் செயல்படும் அங்கன்வாடி மையங்கள்: சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ஆழியார் சாலையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
வத்தலக்குண்டு குளிப்பட்டி மருதாநதி ஆற்றில் மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரம்
சாணார்பட்டி பகுதியில் பூத்து குலுங்கும் மாம்பூக்கள்: அதிக மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!