SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளிவாசல்கள் திறந்திருக்க அனுமதி அளிக்க வேண்டும்

2021-04-09@ 01:19:47

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் காரணமாக அதிகரித்து வரும் பாதிப்பினை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புனித ரம்ஜான் மாதம் வரும் 14ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், சிறுபான்மை முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் பள்ளிவாசல்கள் இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்