வாக்குப்பதிவு இயந்திரத்தை பைக்கில் கொண்டு சென்ற விவகாரம் மாநகராட்சி உதவி பொறியாளர் உட்பட 4 பேருக்கு சம்மன்: வேளச்சேரி போலீசார் உத்தரவு
2021-04-09@ 01:12:35

சென்னை: வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட தரமணி 100 அடி சாலையில் அமைந்துள்ள இந்திரா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் இருந்து நேற்று முன்தினம் 3 ஊழியர்கள் இரு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரத்தை எடுத்து சென்றனர். இதை பார்த்த பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். வேளச்சேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தேர்தல் ஆணைய அதிகாரிகளும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள் என தெரியவந்தது.மேலும் இந்த இயந்திரம் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரியவந்தது. இருந்தாலும் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் பைக்கில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு சென்றதால் சென்னை தேர்தல் அதிகாரி பிரகாஷ் உத்தரவுபடி இரண்டு மாநகராட்சி ஊழிர்கள், ஒரு மெட்ரோ வாட்டர் பணியாளர் உட்பட 3 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வேளச்சேரி தொகுதி தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், பைக்கில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வந்தது தொடர்பாக விசாரணை நடத்த இந்திரா பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், ஊழியர்கள் வேளாங்கண்ணி, சரவணன், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வாசுதேவன் உட்பட 4 பேர் வரும் 12ம்தேதி காலை 10 மணிக்கு வேளச்சேரி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகும் படி வேளச்சேரி போலீசார் 4 பேருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். இதற்கிடையே, சம்பவத்தன்று வாக்குப்பதிவு இயந்திரத்தை அலட்சியமாக கொண்டு சென்ற ஊழியர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை ஜ.ஜி.தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Voting machine bike affair corporation assistant engineer summoned to 4 Velachery police வாக்குப்பதிவு இயந்திரம் பைக் விவகாரம் மாநகராட்சி உதவி பொறியாளர் 4 பேருக்கு சம்மன் வேளச்சேரி போலீசார்மேலும் செய்திகள்
ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதால் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற சட்டதிருத்தத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் 1,800 குழந்தைகள் ஹீமோபிலியா நோயால் பாதிப்பு: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவர் தகவல்
மீண்டும் விரட்டும் கொரோனா மாணவர்களின் கல்வி என்ன ஆகும்? ஆன்லைன் சுரைக்காய் கறிக்கு உதவுமா?
கொரோனா அதிகரிப்பால் பயணிகள் அச்சம்: தொலைதூர பஸ் சேவை குறைப்பு: அதிகாரி தகவல்
உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி தமிழகத்தில் பூங்கா, மக்கள் கூடும் இடங்களுக்கு தடை? ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவர் கொரோனா தடுப்பு மருந்து: தமிழக மருத்துவ சேவை கழகம் திட்டம்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!