SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா தடுப்பூசியை அதிகரிக்கும் வகையில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வரும் 11ம் தேதி முதல் தடுப்பூசி முகாம்: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

2021-04-09@ 01:02:12

சென்னை: கொரோனா தடுப்பூசியை அதிரிக்கும் வகையில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வரும் 11ம் தேதி முதல் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் வரை 34,00,857 பேருக்கு இதுவரை தடுப்பூசி போட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும், தடுப்பூசிக்கான வயது வரம்பை குறைக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலத்தை சேர்ந்த முதல்வர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

அதைப்போன்று இந்திய மருத்துவ சங்கமும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தனர். அதில் கொரோனா தொற்று நோயின் 2வது அலை வேகமாக பரவுவதைக் கருத்தில் கொண்டு, தடுப்பூசி உத்திகளை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர். இதையடுத்து அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தகுதியான மற்றும் விருப்பமுள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மேலும் ஏற்கனவே உள்ள கொரோனா தடுப்பூசி மையம் இதனை கவனிக்கும், இதுபோன்ற பணியிட தடுப்பூசி மையங்கள் ஏப்ரல் 11 முதல் தொடங்கப்படலாம். இந்த தடுப்பூசி திட்டம் தமிழகத்திலும் வரும் 11ம் தேதி நடத்த வாய்ப்புள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்