தொழிற்சாலை, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்
2021-04-09@ 00:54:30

சென்னை: கொரோனா பரவலை தடுக்க தொழிற்சாலை, தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை கட்டாயம் செய்ய வேண்டும் என்றும், வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலை, நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் ஊரடங்கு தளர்வில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை நாளை முதல் அறிவித்துள்ளது. அந்த வகையில், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவதையும், முகக்கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து, அனுமதிக்க வேண்டும்.
முகக்கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்கக்கூடாது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும். மேலும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Tags:
Factory private sector employee vaccination compulsory தொழிற்சாலை தனியார் நிறுவன ஊழியர் தடுப்பூசி கட்டாயம்மேலும் செய்திகள்
ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதால் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற சட்டதிருத்தத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் 1,800 குழந்தைகள் ஹீமோபிலியா நோயால் பாதிப்பு: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவர் தகவல்
மீண்டும் விரட்டும் கொரோனா மாணவர்களின் கல்வி என்ன ஆகும்? ஆன்லைன் சுரைக்காய் கறிக்கு உதவுமா?
கொரோனா அதிகரிப்பால் பயணிகள் அச்சம்: தொலைதூர பஸ் சேவை குறைப்பு: அதிகாரி தகவல்
உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி தமிழகத்தில் பூங்கா, மக்கள் கூடும் இடங்களுக்கு தடை? ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவர் கொரோனா தடுப்பு மருந்து: தமிழக மருத்துவ சேவை கழகம் திட்டம்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!