கொலை வழக்கில் 3 ஆண்டுக்குப்பின் சென்னை விமான நிலையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது
2021-04-09@ 00:44:46

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்தவர் ராஜா (50), எலக்ட்ரிக்கல் ஊழியர். கடந்த 2018ம் ஆண்டு தொண்டியில் நடந்த கோஷ்டி மோதலில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் ராஜா முக்கிய குற்றவாளி. இதையடுத்து தொண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை தேடி வந்தனர். ஆனால் அவர், வெளிநாட்டுக்கு தப்பி விட்டார். இதையடுத்து ராமநாதபுரம் எஸ்பி, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக ராஜாவை அறிவித்தார். மேலும், அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர். இந்நிலையில் துபாயில் இருந்து பிளை துபாய் சிறப்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் 3 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு கொலை குற்றவாளி ராஜாவும் வந்தது தெரிந்தது. அவரை மடக்கி பிடித்து, ராமநாதபுரம் எஸ்பிக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து, ராஜாவை கைது செய்ய ராமநாதபுரம் மாவட்ட தனிப்படை போலீசார் சென்னைக்கு வருகின்றனர்.
Tags:
Arrested at Chennai airport after 3 years in murder case கொலை வழக்கில் 3 ஆண்டுக்குப்பின் சென்னை விமான நிலையத்தில் கைதுமேலும் செய்திகள்
பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை தஞ்சை போலீஸ்காரர் சஸ்பெண்ட்
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
தஞ்சை அருகே மணல் கடத்தல் தகராறில் பாஜ பெண் நிர்வாகி வீடு சூறை: அதிமுக பிரமுகர் உள்பட 12 பேர் கைது
அந்தியூர் பகுதியில் கள்ளநோட்டு அச்சிட்ட 2 பேர் பிடிபட்டனர்: ரூ.2 லட்சம், பிரிண்டர் பறிமுதல்
சென்னை வந்த விமான இருக்கையில் பதுக்கிய 6 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்: கடத்தல் ஆசாமிக்கு வலை
மயிலாப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: புல்லாங்குழல் ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம் உத்தரவு
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!