கர்நாடகாவில் 2ம் நாளாக பஸ் ஸ்டிரைக் எஸ்மா சட்டத்தை பயன்படுத்த முடிவு: குடியிருப்புகளை காலி செய்ய உத்தரவு
2021-04-09@ 00:07:58

பெங்களூரு: கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர்கள் மீது எஸ்மா சட்டத்தை பயன்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது. கர்நாடகாவில் 6வது ஊதிய உயர்வு குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கூடுதலாக பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கும் படியை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட ேகாரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்றும் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். அரசு பஸ்கள் இயங்காததால் தனியார் பஸ் நிறுவனங்கள் பயணிகளிடம் கொள்கை கட்டணம் வசூலிக்கின்றன. பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்து சங்கங்கள் மறுத்து விட்டதால், முதல்வர் எடியூரப்பா கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்களை 24 மணி நேரத்திற்கும் பணி்க்கு திரும்பும்படி எச்சரித்தார். ஆனால், அதை நிராகரித்த ஒரு லட்சம் ஊழியர்களை எஸ்மா சட்டத்தின் கீழ் ஒரேநாளில் அவர் அதிரடியாக பணிநீக்கம் செய்தார். இதே அஸ்திரத்தை பயன்படுத்த எடியூரப்பா பரிசீலித்து வருகிறார். மேலும், அரசு போக்குவரத்து கழக குடியிருப்புகளில் வசித்து வரும் ஊழியர்கள் 24 மணி ேநரத்திற்குள் பணிக்கு திரும்பாவிட்டால், குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என்று வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நிருபர்களை மிரட்டிய எடியூரப்பா
முதல்வர் எடியூரப்பா நேற்று அளித்த பேட்டியில், ‘‘போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் மீது என்ன நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று அரசுக்கு தெரியும். நீங்கள் (நிருபர்கள்) எந்த ஆலோசனையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அரசு அதன் வேலையை பார்க்கும். தேவையில்லாமல் அரசு நிர்வாக விஷயத்தில் தலையிட வேண்டாம்,’ என்று எச்சரித்தார்.
மேலும் செய்திகள்
டெல்லி, பஞ்சாப்-அரியானாவின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கொரோனா
கேரளாவுக்கு வரும் வெளிமாநிலத்தினருக்கு முன்பதிவு கட்டாயம்
பைக்கில் பின்னால் சென்றவர் பலி: ஹெல்மெட் அணியாததால் நஷ்டஈட்டை குறைக்கக்கூடாது: கேரள ஐகோர்ட் உத்தரவு
டிவிட்டரில் கோளாறு பொதுமக்கள் பேஜாரு: சர்வர் முடங்கியதால் பாதிப்பு
டெல்லி போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு ஒரு ஏக்கரில் நினைவிடம்: ராஷ்டிரிய லோக் தளம் அறிவிப்பு
இடைத்தேர்தல் நடந்த திருப்பதி மக்களவை தொகுதியில் மோதல்: குறைந்த வாக்குப்பதிவு
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!