5942 கிமீ சைக்கிள் பயணம் ராணுவ அதிகாரி 2 கின்னஸ் சாதனை
2021-04-09@ 00:07:55

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக பணி்யாற்றுபவர் பாரத் பனனு. இவர் 2 உலக கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார். இவர் கடந்த 2020ம் ஆண்டு, அக்டோபர் 10ம் தேதி லேவில் இருந்து மணாலி வரையிலான 472 கிமீ தூரத்தை தனியாக சைக்கிளின் மூலம் 35 மணி நேரம் 25 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார். இதனை தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபர் 10ம் தேதி டெல்லியில் இருந்து தனது இரண்டாவது சாதனைக்கான சைக்கிள் பயணத்தை அவர் தொடங்கினார். டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவை இணைக்கும் தங்க நாற்கர சாலையில் தனது சைக்கிள் பயணத்தை தொடர்ந்த அவர், 5942 கிமீ தூரத்தை 14 நாட்கள், 23 மணி நேரம், 52 நிமிடங்களில் கடந்து தனது 2வது சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்த 2 சாதனைக்கான சான்றிதழையும் அவர் சமீபத்தில் பெற்றார்.
மேலும் செய்திகள்
டெல்லி, பஞ்சாப்-அரியானாவின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கொரோனா
கேரளாவுக்கு வரும் வெளிமாநிலத்தினருக்கு முன்பதிவு கட்டாயம்
பைக்கில் பின்னால் சென்றவர் பலி: ஹெல்மெட் அணியாததால் நஷ்டஈட்டை குறைக்கக்கூடாது: கேரள ஐகோர்ட் உத்தரவு
டிவிட்டரில் கோளாறு பொதுமக்கள் பேஜாரு: சர்வர் முடங்கியதால் பாதிப்பு
டெல்லி போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு ஒரு ஏக்கரில் நினைவிடம்: ராஷ்டிரிய லோக் தளம் அறிவிப்பு
இடைத்தேர்தல் நடந்த திருப்பதி மக்களவை தொகுதியில் மோதல்: குறைந்த வாக்குப்பதிவு
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!