SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடும்ப சண்டையால் பிரிவு முலாயம் அண்ணன் மகள் பாஜகவில் ஐக்கியம்: மாவட்ட பஞ். தலைவர் பதவிக்கு போட்டி

2021-04-08@ 21:50:19

லக்னோ: குடும்ப சண்டையால் ஏற்பட்ட பிரிவால் முலாயம் சிங் யாதவின் அண்ணன் மகள் சந்தியா பாஜகவில் இணைந்துள்ளார். அவர் பாஜக சார்பில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். உத்தரபிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 15ம் தேதி முதல் 29ம் தேதி வரை  நடைபெறுகிறது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவின் மகள் முறையான சந்தியா யாதவ் (முலாயம் சிங்கின் மூத்த சகோதரர் அபாய்ராம் யாதவின் மகள் மற்றும் முன்னாள் எம்பி தர்மேந்திர யாதவின் மூத்த சகோதரி), பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இவர் வரவிருக்கும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் தலைவர் பதவியை கைப்பற்ற பாஜக சார்பில் பேட்டியிடுகிறார். முன்னதாக மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் சந்தியா யாதவ், மைன்புரி மாவட்டத்தின் 18வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே சமாஜ்வாதி கட்சியின் போட்டியிட்டு மைன்புரியின் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பணியாற்றினார். ஆனால், தற்போது முலாயம்சிங் யாதவ் குடும்பத்துடன் ஏற்பட்ட  சண்டையால் அவர் தன்னை பாஜகவில் இணைந்துக் கொண்டார். சந்தியா யாதவ் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல்  செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

  • uk-lockdown13

    பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!

  • mask_ramadaaa1

    சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!

  • chenaabbb11

    இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!

  • 13-04-2021

    13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்