SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரம்பலூர் அருகே கோழிப்பண்ணையில் பயங்கர தீ 5 ஆயிரம் கோழிகள் கருகி பலி

2021-04-08@ 21:45:09

வேப்பந்தட்டை: பெரம்பலூர் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிகள் கருகி இறந்தன. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்துள்ள வி.களத்தூர்-மேட்டுப்பாளையம் சாலையை சேர்ந்தவர் பெரியசாமி(45). இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று மதியம் கோழிப்பண்ணையில் திடீரென தீ பிடித்து மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது. தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வந்து போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

இந்த பயங்கர தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி பலியாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கோழிப் பண்ணைக்கு அருகே சோளத்தட்டைக்கு விவசாயி ஒருவர் வைத்த தீ கோழிப்பண்ணைக்கு பரவியது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்