SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரியில் வெளிநாட்டு பறவைகள் சீசன் நிறைவு பெறுகிறது: காலில் வளையமிட்டு வந்துள்ள ஐரோப்பிய பறவைகள்

2021-04-08@ 21:09:44

நாகர்கோவில்: ஐரோப்பிய நாடுகளில் இருந்து மணக்குடி பறவைகள் பாதுகாப்பு பகுதிக்கு காலில் வளையமிட்ட இரு பறவைகள் இவ்வாண்டு இடப்பெயர்ச்சி வாயிலாக வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தின் மணக்குடி பறவைகள் பாதுகாப்பு பகுதியான புத்தளம் உப்பளம், சாமிதோப்பு உப்பளம் ஆகியவற்றில் வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. இப்பறவைகள் வந்து மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புகின்றன. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை ஆர்ட்டிக் பனிப்பகுதிகளில் இருக்கின்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து பறவைகள் இந்தியாவுக்கு வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளை பனிக்காலத்தில் கடுங்குளிர் வாட்டுகின்றபோது, உணவுக்காக திண்டாட வேண்டிய சூழ்நிலை பறவைகளுக்கு ஏற்படுகின்றது. இந்தநிலையில் மிதமான தட்பவெட்ப காலநிலை நிலவுகின்ற இந்திய பகுதிகளுக்கு பறவைகள் படையெடுக்கின்றன. மணக்குடி உப்பள பகுதிகளில் பறவைகளுக்குத் தேவையான உணவு, உறைவிடம், பாதுகாப்பு கிடைப்பதால் பறவைகள் இப்பகுதிகளில் முகாமிடுகின்றன. செங்கால் உள்ளான், ஆலா ஆகிய பறவைகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்துள்ளன. இந்த பறவைகளின் கால்களில் வளையமிடப்பட்டிருந்தன.

இந்த பறவைகள் தொடர்பாக பறவைகள் ஆர்வலர் மற்றும் ஐயூசிஎன் எனப்படும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்க உறுப்பினர் டேவிட்சன் சற்குணம் கூறுகையில், ‘ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்துள்ள இந்த பறவைகள் சுவாமிதோப்பு உப்பளத்தில் கண்டறியப்பட்டன. இவற்றின் கால்களில் வளையங்கள் உள்ளபோதும் தகவல்கள் தெளிவாக தெரியவில்லை. ஐரோப்பிய நாடுகளில் பனிக்காலம் முடிந்து வசந்தகாலம் துவங்கியதும் இப்பறவைகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிவிடும். வெளிநாடுகளில் இருந்து நமது பகுதிக்கு அழையா விருந்தாளிகளாக வருகின்ற பறவைகளை பாதுகாப்பது நமது கடமை.

அவற்றின் வாழிடங்களை மாசுபடாமல் பாதுகாப்பது, வேட்டையாடுவதை தடுப்பது, பறவைகளை அச்சுறுத்தாமல் இருப்பது போன்றவற்றை கண்காணித்து பறவைகளைப் பாதுகாக்க வேண்டும். வனத்துறை, மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை பொதுமக்கள் இணைந்து பறவை பாதுகாப்பில் ஈடுபட வேண்டும். பறவைகள் இடம்பெயரும்போது அவற்றின் சொந்த நாடுகளில் கால் கழுத்து இறகு ஆகியவற்றில் வளையமிடுவது அப்பறவைகள் குறித்த ஆய்வுகளை செய்வதாகும். எந்த பகுதி வழியாக, எந்த நாடுகளுக்கு பறவைகள் செல்கின்றன, செல்கின்ற நாட்டின் உணவு வகைகள், நீரின்தன்மை, தட்பவெப்பநிலை, பாதுகாப்பு, கண்காணிப்பு, எவ்வளவு நாட்கள் தங்குகின்றன?

மீண்டும் அந்த நாட்டிற்கு அதே இடத்திற்கு செல்கின்றனவா? பல ஆயிரம் கி.மீட்டர் பறந்து தடைகளை தாண்டி சொந்த நாட்டிற்கு பத்திரமாக திரும்பி வருகின்றனவா? என்பது போன்ற ஆய்வுகளை செய்ய வளையமிடுதல் பேருதவியாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • niger-scl-15

  நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

 • maharastra-15

  தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

 • 15-04-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-04-2021

  15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • singapore-door-robot

  சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்