SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதத்தை வென்ற 40 ஆண்டு பிரண்ட்ஷிப் சாவிலும் இணை பிரியா நண்பர்கள்

2021-04-08@ 21:03:54

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில் அல்லா கோவில் அருகே வசித்தவர் மகாலிங்கம்(78). இவர் தெருவின் அருகே உள்ள காளியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்தார். சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவர் வீட்டின் எதிர் புறம் வசித்து வந்தவர் ஜெயிலாபுதின்(66). ரைஸ்மில் நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் சுமார் 40 வருடங்களாக இணைபிரியாமல் நண்பர்களாக இருந்து வந்தனர். மகாலிங்கம் வீட்டில் சுப காரியங்கள் நடந்தாலும், பண்டிகை காலங்களாக இருந்தாலும் ஜெய்லாபுதீன் கலந்து கொள்வார். அதுபோல் ஜெய்லாபுதீன் வீட்டில் இதுநடந்தாலும் மகாலிங்கம் தவறாமல் ஆஜராகி விடுவார்.

இரு குடும்பத்தினரும் பண்டிகை மற்றும் விழா காலங்களில் உணவு பதார்த்தங்களை பரிமாறிக்கொள்வார்கள். இருவருமே நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். அருகருகே இருந்த படுக்கையில் சிகிச்சை பெற்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஒருவர் பின் ஒருவராக அரை மணி நேரத்திற்குள்ளாக இருவரும் இறந்தனர். இதுகுறித்து இருவரின் பிள்ளைகள்  கூறுகையில், எங்களின் தந்தைகளை போல், நாங்களும் ஒற்றுமையாக உற்றார், உறவினர் போல் சுப துக்க காரியங்களில் ஒன்றிணைந்து மதங்களை கடந்து தொடர்ந்து  நட்புடன் இருப்போம் என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்