ஐபிஎல் போட்டிக்காக ‘India Ki Vibe Alag Hai’ என்கிற புதிய பாடல் ஒன்றை 8 மொழிகளில் உருவாக்கிய ஹாட்ஸ்டார் நிறுவனம் !
2021-04-08@ 14:51:56

டெல்லி: ஒவ்வொரு அணி ரசிகர்களும் எப்படிக் கொண்டாடுகிறார்கள், ஐபிஎல் போட்டி அதன் ரசிகர்களுக்கு எவ்வளவு முக்கியமானது. கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக, தொடக்க நிலை ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி கிடையாது.
நாளை (ஏப்ரல் 9) சென்னையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் மும்பையும் பெங்களூரும் மோதுகின்றன. அடுத்த நாள், மும்பையில் சென்னையும் டெல்லியும் மோதுகின்றன. இந்தியா, ஐபிஎல் போட்டிக்குத் தயாராகி வரும் நிலையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி, ‘என்டர்டெயின்மென்ட் கா ஆல்-ரவுண்டர்’ என்கிற புதிய பிரசாரத்தைச் சில நாள்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்காக ஹாட்ஸ்டார் நிறுவனம் ‘India Ki Vibe Alag Hai’ என்கிற புதிய பாடல் ஒன்றை எட்டு மொழிகளில் உருவாக்கியுள்ளது. ஐபிஎல் போட்டியை ஒவ்வொரு அணி ரசிகர்களும் எப்படிக் கொண்டாடுகிறார்கள், ஐபிஎல் போட்டி அதன் ரசிகர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கும் விதமாகப் பாடலின் விடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
நியூகிளியா இசையமைத்துள்ளார். ஐபிஎல் அணிகளை முன்னிறுத்தும் எட்டு நகரங்களிலும் இப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 9 அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டியின் அனைத்து நேரலை ஆட்டங்களும் புதிய மற்றும் பழைய டிஸ்னி + ஹாட்ஸ்டார் (ரூ. 399 /12 மாதங்களுக்கு), டிஸ்னி + ஹாட்ஸ்டார் ப்ரீமியம் (ரூ. 1499 /12 மாதங்களுக்கு) சந்தாதாரர்களுக்குக் கிடைக்கும். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம், மலையாளம், மராத்தி என 8 மொழிகளில் கிரிக்கெட் வர்ணனை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஐபிஎல் டி20: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஐபிஎல் டி20: ஐதராபாத் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி
ஐபிஎல் டி20: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு
சென்னை வேளச்சேரி தொகுதியில் உள்ள 92வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நிறைவு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு அவசர ஆலோசனை..!!
72 குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை..!!
டெல்லியில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை உள்ளது!: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
நடிகர் விவேக்கின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!: திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
நகைச்சுவை நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் சற்றுநேரத்தில் தொடங்குகிறது..!!
சட்டவிரோத கடைகளை அனுமதிக்கும் ஷாப்பிங் மால் உரிமங்களை ரத்து செய்யகோரிய மனு தள்ளுபடி!: ஐகோர்ட்
மின்வாரிய உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான கணினி வழித் தேர்வு ஒத்திவைப்பு!: மின்வாரியம்
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ. 2.90 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!: சுங்கத்துறை அதிரடி..!!
நடிகர் விவேக் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நிறைவு..!!
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!