SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேளச்சேரியில் ஈ.வி.எம்.களை ஸ்கூட்டரில் எடுத்து சென்ற விவகாரம்!: தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் உட்பட 4 பேருக்கு போலீஸ் சம்மன்..!!

2021-04-08@ 10:40:00

சென்னை: சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. சென்னை வேளச்சேரி தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒரு விவிபேட் இயந்திரம் ஆகியவற்றை ஸ்கூட்டரில் எடுத்து செல்ல முயன்றது தொடர்பாக, தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், ஊழியர் சரவணன் உள்பட 4 பேருக்கு வேளச்சேரி காவல்நிலையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் வருகின்ற 12ம் தேதி காலை 10 மணிக்கு வேளச்சேரி காவல் நிலையத்தில் ஆஜராகும்படி காவல்துறை சார்பில் நோட்டீசும் அனுப்பப்பட்டிருக்கிறது.

கடந்த 6ம் தேதி சென்னை தரமணி 100 அடி சாலையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர், 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றனர். இதனை கண்ட திமுக-வினர் பொதுமக்களின் உதவியுடன் அவர்களை மடக்கிப்பிடித்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 3 பேரையும் வேளச்சேரி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றவர்கள் உதவி பொறியாளர் செந்தில்குமார், மாநகராட்சி ஊழியர்கள் வேளாங்கண்ணி, சரவணன் மற்றும் தற்காலிக ஊழியர் வாசுதேவன் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சரத்பாபு உள்ளிட்டவர்களும் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் ஈ.வி.எம்.களை கொண்டு சென்ற விவகாரத்தில் மாநகராட்சி, தேர்தல் ஆணைய அதிகாரிகள், விசாரணை நடத்தி உதவி பொறியாளர் செந்தில்குமார் உள்பட 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். இந்த நிலையில் சட்ட வல்லுநர்கள் ஒப்புதலை பெற்று காவல்துறையினர் விசாரணை நடத்தி சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 பேரும் வருகின்ற 12ம் தேதி சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்