இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1,26,789 பேருக்கு கொரோனா.. 685 பேர் பலி. 59,258 பேர் குணமடைந்தனர்!!
2021-04-08@ 09:57:11

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.67 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதே போல், பாதிப்பு 1.29 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 1,26,789 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,29,28,574 ஆக உயர்ந்தது.
* புதிதாக 685 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,66,862 ஆக உயர்ந்தது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 59,258 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,18,51,393ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,10,319 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 91.67% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.29% ஆக அதிகரித்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 7.04% ஆக அதிகரித்துள்ளது.
* இதுவரை இந்தியாவில் 9,01,98,673 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29,79,292 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கொரோனா முதல் அலையை விட 2வது அலையில் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு
கொரோனா சிகிச்சைக்கு தேவையான கூடுதல் மருந்துகளும் தடுப்பூசிகளும் வழங்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு மம்தா வேண்டுகோள்!!
நாட்டில் 2-வது அலை கொரோனா பரவல் தீவிரம்: தடுப்பூசி தட்டுப்பாட்டால் அல்லல்படும் இந்தியா
ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவதில் பாரபட்சம் குஜராத்துக்கு 1200 மெட்ரிக் டன் ராஜஸ்தானுக்கு 124 மெட்ரிக் டன்: மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
ரூ.300 டிக்கெட்டில் 90 நாட்களுக்குள் ஏழுமலையானை தரிசிக்கலாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை நாடாளுமன்ற அவசர கூட்டத்தைக் கூட்டுங்கள்