SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரூர் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வாக்களிக்க தரப்பட்ட டோக்கனுக்கு பட்டுச்சேலை, தங்ககாசு எங்கே? நிர்வாகிகளை மக்கள் முற்றுகை

2021-04-08@ 02:36:04

கரூர்: கரூர் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஓட்டு போடுவதற்காக வழங்கப்பட்ட டோக்கனுக்கு பட்டுச்சேலை, தங்ககாசு எப்போது கிடைக்கும் என நிர்வாகிகளை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலேயே கரூர் மாவட்டத்தில்தான் தமிழகத்திலேயே அதிகளவாக 83.96 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவுக்கு முன்னதாக, கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வாக்களிக்க வேண்டும் என தொகுதி முழுவதும் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் காலை முதல் மதியம் வரை தொகுதிக்குட்பட்ட 48 நகராட்சி, 12 ஊராட்சிகள் என அனைத்து பகுதிகளிலும் அதிமுகவினர் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்துள்ளனர். அப்போது, ஓட்டு போட்ட ஒரு சில நாட்களில், இந்த டோக்கனை கொண்டு வந்து காண்பித்தால், ஒரு பட்டுச் சேலை, ரூ.2 ஆயிரம், 2 கிராம் தங்க காசு தரப்படும் என ஆசை வார்த்தைகள் கூறியதாகவும் கூறப்படுகிறது.

ஊராட்சி பகுதிகளில் ஒரு சேலையுடன் டோக்கன் வழங்கப்பட்டு, ஓட்டு போட்ட பிறகு, டோக்கனை கொண்டு வந்தால், ரூ.2ஆயிரம், 2கிராம் தங்க காசு வழங்கப்படும் எனவும் வார்த்தைகள் கூறி டோக்கன் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தொகுதி முழுதும் அதிமுகவினர் பரவலாக டோக்கன் விநியோகம் செய்த தகவல் காட்டுத் தீ போல பரவியதால் டோக்கன் கிடைக்காத நபர்களும், அந்தந்த பகுதி அதிமுக நிர்வாகிகளை நேரிலும் மற்றும் போனிலும் தொடர்பு கொண்டு டோக்கன் பெறுவதில் ஆர்வமாக இருந்துள்ளனர். இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் கரூர் சட்டமன்ற தொகுதியில் 83.54 சதவீதம் அளவுக்கு வாக்குபதிவு நடைபெற்றுள்ளது எனவும் கூறப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட வேறு வார்டு பகுதிகளில் டோக்கன் பெற்ற வாக்காளர்கள் நேற்று மதியம் முதல் போனிலும், நேரிலும் அதிமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு டோக்கனுக்கான பொருட்கள் எப்போது கிடைக்கும் என நச்சரிக்கத் துவங்கியுள்ளனர்.

அதிமுக நிர்வாகிகளும், ஒரு சில பகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று வந்தால் டோக்கனுக்கான பொருட்கள் வழங்கப்படும் என கூறி தப்பிச் செல்வதில் குறியாக உள்ளனர். சில பகுதிகளில் நாங்களே கூப்பிடுவோம் என கூறி வாக்காளர்களை திருப்பி அனுப்புவதில் குறியாக உள்ளனர். இதன் காரணமாக கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று மதியம் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி வாங்கிய டோக்கனுக்கான பொருட்கள் கிடைக்குமா? கிடைக்காதா? இது ஏமாற்று வேலையா? என நிர்வாகிகளை முற்றுகையிட்டு புலம்பியுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்