SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலைமை சப்ளை செய்த பணத்தை சுருட்டிய இலை கட்சியினரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-04-07@ 06:28:26

‘‘பணத்தை பதுக்கிய இலை நிர்வாகிகள்... கனவில் கூட வெற்றி பெறுவதை மறந்த இலை கட்சி வேட்பாளர்கள்... பணம் பதுக்கியவர்களை கட்டம் கட்டி தூக்க தலைமை முடிவு செய்துள்ளதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில், இலை கூட்டணியில், கோவை தெற்கு தொகுதி தவிர மீதமுள்ள 9 தொகுதிகளில் இலை தரப்பே நேரடியாக போட்டியிடுகிறது. இத்தொகுதி வேட்பாளர்கள் சார்பில், வாக்காளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கவும், கொஞ்சம் ‘வீக்’கான பகுதிகளில் தலா ரூ.2 ஆயிரம் பணம் விநியோகம் செய்யவும் கட்சி தலைமை உத்தரவிட்டது. இதற்காக, தலைமையிடத்தில் இருந்து ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் குறைந்தது ரூ.5 கோடி முதல் அதிகபட்சம் ரூ.10 கோடி வரை பணம் அனுப்பி வைக்கப்பட்டது. இதை, கடைசி வாக்காளர் வரை பிரித்து அனுப்ப, கட்சி சார்பில் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். அதன்படி, விநியோகம் ஜரூராக துவங்கியது. ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால், இலை கட்சியினர் பணம் பதுக்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் இலை கட்சியினர் வேட்பாளர் கொடுத்த பணத்தில் 50 சதவீதம் சுருட்டி விட்டனர். இதனால் பணம் கிடைக்காத வாக்காளர்கள் இலை தரப்பு மீது கடும் ெகாந்தளிப்பில் இருந்தனர். அவர்கள் வாக்களிக்கும்போது இலை தரப்பை திட்டிக் ெகாண்டே தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு ஓட்டு ேபாட்டுள்ளனர். குறிப்பாக இலை கட்சியினர் அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் கூட்டு சேர்ந்து அமுக்கிவிட்டனர். இந்த தகவல், வாக்குப்பதிவு நாளான நேற்றுதான், வேட்பாளர்களுக்கு தெரியவந்தது. இதைக்கேட்டு அவர்கள், அதிர்ந்து போய்விட்டனர். கட்சியின் மேலிட தலைவர்களும் உறைந்து போய்விட்டனர். ‘‘ஒவ்வொரு முறையும் பிளான், சரியாக ஒர்க் அவுட் ஆகுமே, இந்தமுறை ஏன் சொதப்பியது’’ என தலையை பிய்த்துக்கொண்டுள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை கட்சிக்கு இருக்கிற கொஞ்சம் நஞ்ச தொண்டர்களும் இலை கட்சிக்கு ஒத்துழைக்கவில்லையாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வேலூர்  மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் கூட்டணி கட்சியான தாமரை கட்சியினர்  தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. மாறாக எதிர்க்கட்சி கூட்டணியில் சிறிய  கட்சிகள் கூட பிரதான கட்சியினரோடு கை கோர்த்து பூத்தில் அமர்ந்தனர். பல இடங்களில் பூத்களில் தாமரை கட்சியினரோ, இதர கட்சியினரோ  தலைக்காட்டவில்லை.
ஏற்கனவே வாக்குசேகரிப்பு உட்பட பல தேர்தல் கால  நடவடிக்கைகளில் தாமரையின் ஒத்துழைப்பு தங்களுக்கு கிடைக்கவில்லை என்பதை  தலைமைக்கு இலைக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனராம். இந்த நிலையில்  வாக்குப்பதிவு அன்றும் அவர்கள் காணாமல் போனது, தேர்தல் முடிவுகளை எந்தளவு  பாதிக்கும் என்ற ஆதங்கம் இலைக்கட்சியினர் மத்தியில் நிலவுகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தெர்மாகோல் மந்திரியை தெறிக்க விட்டுருச்சே  தேர்தல் ஆணையம்..’’
‘‘தேர்தலில்  வரையறுக்கப்பட்ட ரூ.30 லட்சத்தைத் தாண்டி அதிக தொகையை மதுரை மந்திரியான  ‘‘தெர்மாகோல்காரர்’’ செலவிட்டு விட்டாராம். வாகனங்களில் எல்இடி டிவிகளை  வைத்து பிரசாரம் துவங்கி ஏகப்பட்ட செலவுகளை தாம் தூமென்று செலவழித்தது  ஒரு
புறம், பெரும்பகுதி பணத்தையும் தொகுதிக்குள் ஓட்டுக்காக வாரி இறைத்தது  மறுபுறம் என ஒவ்வொன்றையும் செலவின பார்வையாளர் கண்டறிந்து, அதிகம்  செலவிட்டிருப்பதாக நோட்டீஸ் அனுப்பி விட்டாராம். இதில் ‘‘அப்செட்’’ ஆன  ‘‘தெர்மாகோல்காரர்’’ கடைசி கட்டத்தில் காசு செலவிட்டால், மேலும்  மாட்டிக்கொள்வோமே என்று விறுவிறுப்பாக செய்ய வேண்டிய இறுதி பிரசாரத்திற்கு  கூட செல்லாமல் வீட்டுக்குள் முடங்கினாராம்.
 அத்தோடு நேற்று தேர்தல்  நாளில் ஓட்டளிக்க வந்தபோதும், இயந்திர பழுதினால் அடுத்தடுத்து  ஓட்டுப்போடமுடியாமல் போய், மனசு நொந்து காத்திருந்து கடைசியில் ஓட்டுப்  போட்டிருக்கிறார். மேலும், மேலிடத்திலிருந்து பேட்டி கொடுக்க இவருக்கு தடை  போட்டதால், கலகலவென பேசி முடிக்கும் இவர், அவ்வளவு நேரம் காத்திருந்தும்  ஒருவரிடமும் பேசாமல் உம்மென்று இருந்தாராம். இதனையும் மீறிய இடியாக இவரது  தொகுதிக்காரர்களில் பலர் தங்களுக்கு அமைச்சரின் பணம் வந்து சேரவில்லையென  அந்தந்தப்பகுதி நிர்வாகிகளை சுற்றி வளைத்தும் போராட்டம் நடத்தியதிலும்  ‘‘தெர்மாகோல்காரர்’’ அப்செட்டிற்கு போய் விட்டாராம்...’’ என்றார்  விக்கியானந்தா.
‘‘அல்வா மாவட்ட தகவல் என்ன இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கொரோனா  பரவலை தடுக்க கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைத்த தேர்தல் ஆணையம், பூத்  சிலிப்பை வீடு, வீடாக கொண்டு சேர்க்க தவறி விட்டது. இந்த களேபரத்தால்  பல வாக்காளர்கள் வீடுகளுக்கே திரும்பிச் சென்று விட்டனர். வயதானவர்கள்  சிலருக்கு உங்களுக்கு ஓட்டு இங்கே இல்லை எனக் கூறி திருப்பி  அனுப்பப்பட்டதும் நடந்தது. இதனால் தான் ஆரம்பம் முதலே தமிழகத்தில் குறைந்த  வாக்குப்பதிவு சதவீதமாக அல்வா மாவட்டம் இருந்தது. தேர்தலை சிறப்பாக  நடத்தினாலும் 100 சதவீதம் வாக்குப்பதிவிற்காக பல கோடிகளை செலவழிக்கும்  தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு வழிகாட்டியான பூத் சிலிப்பை முறையாக  வழங்காதது பெரும் குறையே. இதுவும் வாக்குப்பதிவு சதவீதம் குறைவிற்கு  வழிவகுத்து விட்டது...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்