கிணத்துக்கடவு அருகே மஞ்சி மில்லில் பயங்கர தீ விபத்து
2021-04-05@ 12:51:45

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அருகே நேற்று மஞ்சி மில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் டிராக்டர் மற்றும் இயந்திரங்கள் கருகின.
கிணத்துக்கடவு அடுத்த சென்றாம்பாளையம் பிரிவிலிருந்து சென்றாம்பாளையம் செல்லும் சாலையில் கார்த்தி என்பவருக்கு சொந்தமான மஞ்சி மில் இயங்கி வருகிறது. இங்கு 15க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மஞ்சிமில்லுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் மஞ்சி மில்லில் இருந்து பயங்கர புகை வருவதை பார்த்த, அக்கம் பக்கத்தினர் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதற்க்குள் தீ மளமளவென கொட்டி வைக்கப்பட்டிருந்த மஞ்சி முழுவதும் பரவியது. விரைந்து வந்த கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதற்குள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர்கள், நவீன இயந்திரங்கள் தீயில் கருகி நாசமாயின.
மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்களின் உதவியோடு தீயை கட்டுக்குள் கொண்டு கொண்டு வந்தனர்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
விவசாய பயன்பாட்டிற்கு 1022 மெட்ரிக் டன் உரங்கள் பழநிக்கு ரயில் மூலம் வருகை
கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்து இடியும் அபாயம் அரசு மாணவர் விடுதிக்கு புதிய கட்டிடம் : மாணவர்கள் கோரிக்கை
10 வருடங்களாக கண்டுகொள்ளாத அதிமுக அரசு நாயோடை நீர்தேக்கத்தை தூர்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பராமரிப்பில்லை சிதலமடைந்து கிடக்கும் நவீன ஆடுவதை கூடம்: சீரமைக்க கோரிக்கை
புதுப்பொலிவுடன் செயல்படும் உழவர் சந்தைகள் 250 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் தினசரி விற்பனை : 60 ஆயிரம் நுகர்வோர் பயன்பெறுகின்றனர்
பிளவக்கல் அணைக்கு செல்லும் வழியில் உள்ள கால்வாய் பாலத்தில் விழுந்தது ஓட்டை: சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!