அதிமுக தேர்தல் அறிக்கையை மறுக்கும் வகையில் சிஏஏ சட்டத்தை திரும்ப பெற முடியாது: பாஜ தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா புது குண்டு
2021-04-05@ 00:29:36

சென்னை: பாஜ தேசிய செயலாளர் ஜெ.பி.நட்டா சென்னை கிண்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் தெளிவான கூட்டணியை அமைத்துள்ளோம். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இரண்டு கட்ட தேர்தகளிலும் பாஜவின் வெற்றி உறுதியாகி உள்ளது. அசாமில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம். புதுச்சேரியிலும் ஆட்சியைப் பிடிக்க உள்ளோம். கேரளாவிலும் நல்ல வெற்றியைப் பெறுவோம். புதுச்சேரியில் என்.ஆர்.ரங்கசாமி தலைமையில் தே.ஜ.கூ. ஆட்சி அமைக்கும், கேரளாவில் பலமான சக்தியாக உருவெடுத்துள்ளோம். தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர். தமிழ்நாட்டுக்கு உறுதுணையாக உள்ள பிரதமர் மோடியின் செயல்பாடுகளை தமிழக மக்கள் விரும்புகின்றனர். சிறந்த தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே இந்த தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வென்று ஆட்சி அமைக்கும்.
சிஏஏ சட்டம் திரும்ப பெருவதாக அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அது தொடர்பாக நாங்கள் அவர்களிடம் பேசுவோம். திரும்ப பெற முடியாது, எங்களது முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே வருமானவரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும், கட்டிடத்தை வடிவமைப்பதில் சில சிக்கல்கள் உள்ளது. நிலம், மண் பரிசோதனை மேற்கொள்வதிலும் சில சிக்கல்கள் உள்ளன. விரைவில் சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு, கட்டடப்பணி தொடங்கும். எய்ம்ஸ் மருத்துவமனை மிகப்பெரிய திட்டம். அதனால் காலதாமதமாகிறது. இவ்வாறு பேசினார்.
மேலும் செய்திகள்
ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி குஜராத் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி
சொல்லிட்டாங்க...
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று பாஜக கூட்டணியில் இருந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் நடித்த பிரபல நடிகை ஜெயசுதா பாஜவில் சேர முடிவு?
பிளவுகளை கடந்து அதிமுக வெற்றி வாகை சூடும்; அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்: சசிகலா பேட்டி
பூனைக்குட்டி வெளியே வந்தது; ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படத்தயார்?: டிடிவி தினகரன் அறிவிப்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!