SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரு மாநில முதல்வரை பஞ்சாயத்து தலைவராக மாற்றிய கூட்டணி கட்சிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-04-04@ 01:13:47

‘‘கோவையில், செல்போன் கேமராவை பார்த்து இலை கட்சியினர் ஏன் அலறுகிறார்கள்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில் கோவை தெற்கு தவிர மீதமுள்ள 9 தொகுதிகளிலும் இலை வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். இதில், 7 தொகுதிகளில், உதயசூரியனும்-இலைக்கும் இடையே நேரடி போட்டி இருக்கு. போட்டி கடுமையாக இருப்பதால், வாக்காளர்ளுக்கு கரன்சி கொடுத்து கரெக்ட் செய்ய இலை தரப்பு முயற்சி செய்து வருகிறதாம். கூட்டணி கட்சியான தாமரை போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியையும் விட்டு வைக்கவில்லை. இத்தொகுதியில் நேற்று இலை, தாமரை நிர்வாகிகள் களம் இறங்கினர். ஓட்டுக்கு, தலா ஆயிரம் ரூபாய் விநியோகத்தை துவக்கினர். ஆனால், திமுகவினர் வைத்த செக் காரணமாக, இவர்கள் தேர்தல் அதிகாரியிடம் சிக்கிக்கொண்டனர்.

3 கார் உள்பட 6 வாகனங்கள், ரூ.46 ஆயிரம் பணம் ஆகியவையும் சிக்கியது. இரு கட்சிகளை சேர்ந்த 12 பேர் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோலவே, மீதமுள்ள தொகுதிகளிலும் பணம் விநிேயாகம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஆனால், செல்லும் இடமெல்லாம், திமுகவினர் செல்போன் கேமராவுடன் கேட் போடுவதால், இலை தரப்பினர்  திணறுகின்றனர். செல்போன் கேமராவை வைத்து கொண்டு கையை ஆட்டி காட்டுகிறார்களாம்... இதனால என்ன செய்வது என இலை கட்சி திணறலில் இருக்காம். ‘‘எப்படி போனாலும், கேட் போடுறானே...!’’ எப்படி பணம் கொடுப்பது என்று என்ற வடிவேலுவின் சினிமா காமெடி வசனம்போல், இருப்பதை பார்க்க முடிந்ததாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒரு மாநிலத்தின் முதல்வரை பஞ்சாயத்து செய்யும் தலைவராக மாற்றிய கூட்டணி கட்சிகளால்... இலை நொந்து ேபாய் இருப்பதை சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘  மாங்கனி மாவட்டத்தில் சமீபகாலமாக முதல்வர் வருகை தந்தால், எலக்‌ஷன் தொடர்பாக  கட்சிக்காரங்க ெசால்லும் புகார்களை ேகட்கவே நேரம் சரியாக இருக்காம். கடந்த  சில நாட்களுக்கு முன்புவரை, உங்க கட்சிக்காரங்க சரியான ஒத்துழைப்பு  தருவதில்லை. ஓட்டுகேட்க உடன் வருவதில்லை என்று கூட்டணி கட்சிகள்  கம்ப்ளைன்ட் சொல்லிக் கிட்டு இருந்தாங்களாம். கருத்து கணிப்புகள் எல்லாம்  வெளியான பிறகு, கூட்டணி கட்சிகள் நமக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று  இலைகட்சிக் காரங்க கம்ப்ளைன்ட் சொல்றாங்களாம். அதே போல் தாமரையை மாம்பழம்  ஒதுக்குது. சைக்கிளை தாமரை தவிர்க்குது என்று வரும் புகார்களுக்கும்  பஞ்சமில்லையாம்.

இந்த எலக்‌ஷன பொறுத்தவரைக்கும் நம்ம கட்சிக்கு  மட்டுமல்ல, கூட்டணி கட்சிகளுக்கும் ரொம்ப முக்கியமானது. அதனால ஒருத்தருக்கு  ஒருத்தர் கம்ப்ளைன்ட் பண்ணாம, களத்தில் இறங்கி வேலையை பாருங்க. நான்  ஏற்கனவே சொன்ன மாதிரி ஜெயிச்சா எல்லாருக்கும் நன்மை கிடைக்கும் என்பதை  மட்டும் மறந்திடாதீங்க என்று அட்வைஸ் கூறி அனுப்பினாராம் விவிஐபி. இதை கேட்ட இலை தொண்டர்கள் முதல்வரை பஞ்சாயத்து தலைவர் ேரட்டுக்கு மாற்றிட்டாங்களேனு வருத்தப்பட்டாங்களாம்...’’என்றார் விக்கியானந்தா.‘‘தாமரை ெசய்த நன்றியை மறக்கக் கூடாது என்று இலைக்கு அட்வைஸ் செய்த சம்பவம் எங்கே நடந்தது...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஜெயலலிதா இருந்த வரையில் மத்தியில் ஆளும் தாமரையை மலராமல் வைத்திருந்தார். ஆனால் அவரது மறைவிற்கு பின்னர் முதல்வரும், துணை முதல்வரும் தாமரை தலைவர்களின் சொல்படி நடந்தனர்.  நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை, புதிய கல்விக் கொள்ைக உள்ளிட்ட பல விஷயங்களில் இலை தரப்பினர் தாமரையை எதிர்த்து ஒரு குரலும் கொடுக்கவில்லை.

மாநில உரிமைகளை தாமரையிடம் அடகு வைத்து விட்டனர் என்பது இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இலை மீது வைக்கும் குற்றச்சாட்டு. ஆனால் அல்வா மாவட்டத்தில் ஷாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் வருவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு மைக் பிடித்த சிவன் பெயரைக் கொண்ட அமைப்புச் செயலாளர் ஒருவர், நாங்கள் தாமரைக்கு அடிமை ஆட்சி இல்லை, இலை யாருக்கும் பயப்படாது, தாமரைக்கும் பயப்படாது என தாமரை மேடையிலேயே முழங்கித் தள்ளி விட்டார். தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆட்சி இருக்குமா, இருக்காதா என்ற போது ஆட்சியை பாதுகாத்து தந்தவர்கள் டெல்லியின் இரண்டு விவிஐபிக்கள் தான். இதை இலைக்காரன் எண்ணிப் பார்க்க வேண்டும் என ‘‘பஞ்ச்’ வைத்தார். அரங்கத்தில் இருந்த தொண்டர்களோ பயமில்லை எனக் கூறி விட்டு சரண்டர் ஆகி விட்டாரே...’’ என்று சொல்லி சிரித்தனர்.

‘‘பணத்தை சுருட்டும் சீனியர் இலை கட்சி நிர்வாகிகளை சுருட்டி வீசிய இலை தலைமை பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல உள்ள இலை கட்சியினர் சிலர் தங்களோட தொகுதியில ‘‘ப’’ விநியோகிக்கும் பணியை உள்ளூர் நிர்வாகிங்களுக்கு வழங்கலையாம். அதற்கு பதிலா கட்சியில துடிப்பா இருக்கிற இளைஞர்கள வச்சு சீனியர்கள் மூலமா ‘‘ப’’ விநியோகம் செய்யும் பணிகள் ஜோராக நடந்து வருகிறதாம். இதனால கட்சியில் உள்ள சீனியர் நிர்வாகிகள் பலர், எங்களிடம் வைட்டமினை கொடுக்கமாட்டாங்களாம், யாருக்கு கொடுக்கணும் என்று கைகாட்டுற வேலைய மட்டும் தான் நாங்க கவனிக்கணுமா? என்று கடுப்பில் உள்ளனராம். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் ‘‘ப’’ வைட்டமினில் ஒரு பார்ட்டை அமுக்கி விடலாம் என நினைத்திருந்த நிர்வாகிங்க ஏமாற்றத்துல ஏங்கி கிடக்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்