SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தலுக்கு பிறகு புல்லட் சாமியை டம்மியாக்கும் தாமரையின் தந்திரம் குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2021-04-03@ 00:15:00

‘‘நகைகளை அடமானம் வைத்து ேதர்தலில் நிற்கணுமா என்று பழைய சைக்கிள் கட்சி வேட்பாளர்கள் புலம்புறாங்க. இலை, மணி தரேன்னு ஏமாத்திட்டாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலை கூட்டணியில் பழைய சைக்கிள்காரர்கள் 6 தொகுதிகளில் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். தேர்தல் செலவை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கட்சி தலைமை அன்பு கட்டளையிட்டிருந்ததாம். ஆனாலும் இவர்களுக்கு தேர்தல் செலவுக்கு இலை தரப்பில் இருந்து பணம் வரும் என்று கூறி வந்தார்களாம். சேலம் விஐபி சுற்றுப்பயணம் வந்து சென்ற பின்னர் ‘செட்டில்மென்ட்’ ஆகும் என்று எதிர்பார்த்து இருந்தார்கள். சேலம் விஐபி வந்துபோன பிறகு, இலை தரப்பில் இருந்து கரன்சி தொடர்பான ‘கான்வர்சேஷன்’ எதுவும் வரலையாம்.

இலை தரப்பின் மாவட்ட பொறுப்பாளர்கள், எங்கள் செலவுக்கே இன்னும் கரன்சி வரல... இந்த நிலையில நாங்க உங்களுக்கு என்ன தர முடியும்னு கேட்கிறாங்களாம். இதனால பழைய சைக்கிள்காரர் வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளுக்கு பணம் இல்லாமல் திணற ஆரம்பித்துவிட்டாங்க. இலையும், தாமரையும் கண்டுக்கொள்ளவே இல்லையாம். இதனால் அதிர்ச்சி அடைந்த பழைய சைக்கிள் வேட்பாளர்கள்... வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களின் நகைகளை வாங்கி அடக்கு வைத்து தேர்தல் செலவு செய்ய வேண்டிய அவல நிலையில் இருக்காங்களாம். இப்படி இருந்தால் எப்படி ஜெயிப்பது என்ற கேள்வியும் அவர்களுக்குள் கேட்டதற்கு... உங்க தலைவராச்சு... நீங்களாச்சு, எங்களிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்னு எஸ்கேப் ஆகிட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாஸ்க் போடலைன்னா பேரூராட்சிகாரங்க ‘பைன்’ போடலாம்... ஆனால் டிராபிக் போலீஸ் மாதிரி ஹெல்மெட் போடலைன்னு எப்டி அபராதம் விதிக்கிறாங்க...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘குயின்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சியிலயும் மாஸ்க் போடலன்னா, பேரூராட்சி அதிகாரிங்க மூலமா அபராதம் விதிக்கிறாங்க. இதில் பேரூராட்சி அதிகாரிங்க வாகன சோதனை செய்யறப்போ, வாகன ஓட்டிங்க, மாஸ்க் போட்டுட்டு போனாலும், அவங்கள மடக்கி பிடிக்குறாங்களாம்.நான்தான் மாஸ்க் போட்டிருக்கேனேன்னு வாகன ஓட்டிங்க கேட்டா.. ஹெல்மெட் ஏன் போடலன்னு கேட்டு அதிரடிச்சு, ₹200 கட்டாயம் பைன் வசூல்செய்றாங்களாம். இதனால ஆடிப்போன வாகன ஓட்டிங்க, சார் நீங்க பேரூராட்சி அதிகாரிதானே மாஸ்க் போடலன்னு கேட்டா பரவாயில்ல, ஹெல்மெட்டுக்கு நீங்க ஏன், ைபன் போடுறீங்கன்னு கேட்டா, அதுக்கு அதிகாரிங்க, எங்களுக்கு தினமும் ₹20ஆயிரம் டார்கெட் கொடுத்திருக்காங்க.. போலீஸ்காரங்க எலக்‌ஷன் டூயூட்டி பாக்குறாங்க, அதனால ஹெல்மெட் அணியலனாலும் அபராதம் போட்டு நாங்க எங்க டார்கெட்ட முடிக்கிறோம்னு சொல்றாங்களாம். இதை அருகில் இருந்து பார்த்த பொதுஜனம் ஒருவர், அப்ப காக்கி டிரஸ் போட்டுட்டு வந்து ஹெல்மெட் போடலைன்னு கேளுங்க பணம் தர்றோம்னு சொன்னாங்களாம்... அதுக்கு அதிகாரிகள் பிடி கொடுக்காம வேறு நபரை பிடிக்க போயிட்டாங்க...’’என்றார் விக்கியானந்தா.

‘‘சிட்டிங் எம்எல்ஏவுக்கு திருப்பூர் திருகு வலியா போச்சாமே, ஏன்..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இத்தொகுதி சிட்டிங் எம்எல்ஏ வெற்றியானவர், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத நிலையில், மீண்டும் இவருக்கே கட்சி தலைமை சீட் வழங்கியிருப்பது, மக்களின் கோபத்தை இன்னும் பலமடங்கு அதிகரிக்க செய்துள்ளது. இவர், பிரசாரத்துக்கு செல்லும் இடமெல்லாம், மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல் இத்தனை நாள் எங்கே போனீங்க. இப்போது எந்த முகத்துடன் ஓட்டு கேட்டு வந்தீங்க என மக்கள் விளாசுவதால், வேட்பாளர் வெற்றியானவர் விழி பிதுங்கி நிற்கிறார். இதனால், இலை கட்சி தொண்டர்கள் சோர்வடைந்து விட்டனர். வேட்பாளருடன் சேர்ந்து, பிரசாரத்துக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதை பார்த்த வெற்றியானவர், இப்படி என்னை தனியே விட்டுவிட்டு போனால் நான் ஜெயிப்பது எப்படினு... புலம்ப ஆரம்பிச்சுட்டாங்களாம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புல்லட் சாமி கட்சியில இருந்து ஜெயித்த பிறகு கட்சி தாவ வேண்டும்னு... தங்கள் பிடியில் சிக்கி உள்ள வேட்பாளர்களின் கழுத்தில் ஐடி, சிபிஐ, அமலாக்க துறைகளை வைத்து மிரட்டி வைத்துள்ளதாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘புதுச்சேரி தாமரை கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 9 வேட்பாளர்களும் ஜெயிக்க வேண்டுமென அசுர பலத்தில் வேலையை துவக்கிட்டாங்க. ‘ப’ வைட்டமினை தண்ணீராக செலவு செய்யறாங்க. அதே நேரத்தில் கூட்டணி கட்சியான புல்லட்சாமி கட்சி கரன்சி இல்லாமல் காய்ந்து போய் தள்ளாடுறாங்களாம். இதனால் அந்த கட்சியின் வேட்பாளர்கள் கையை பிசைந்து கொண்டு நிற்கின்றனர். சிலர் தனது சொந்த செலவிலும், கடன் வாங்கியும் செலவு செய்து வருகின்றனர்.இதனையெல்லாம் வைத்து பார்க்கும் போது, தேர்தல் முடிந்த பிறகு குறிப்பிட்ட பலர் ஒட்டுமொத்தமாக தாமரைக்கு தாவ முடிவு செய்து இருக்காங்களாம்... ஜெயித்துவிட்டு எங்கள் அணிக்கு வரணும்.

எங்கள் தாமரை புதுச்சேரியில் மலரணும்... உங்க வரலாறு எல்லாம் எங்களிடம் இருக்கு... வர மறுத்தால் எங்களிடம் உள்ள எல்லா ஏஜென்சிகளையும் புதுச்சேரியில் இறக்கி... உங்களை காலி செய்துவிடுவோம்னு மிரட்ட ஆரம்பித்து இருக்காங்களாம்.. தேர்தலுக்கு பிறகு புல்லட் சாமியின் வேட்பாளர்களை தக்க வைப்பதே பெரும் பிரச்னையாக இருக்கும் என தெரிய வந்திருக்கிறது. ஜக்கு சின்னத்தில் நின்று வெற்றிபெறும் எம்எல்ஏக்கள் தாமரை பக்கம் கம்பி நீட்ட இருக்காங்க என்ற  தகவல் புல்லட்சாமியின் காதுக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே புல்லட்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜ மறுப்பதால், ஏதோ திட்டத்துடனே தாமரை தரப்பு காய் நகர்த்தி வருகிறதாம். இதனால தேர்தலுக்கு பிறகு புதுச்சேரியில் புது புது திருப்பங்கள் இருக்கலாம்னு பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்