ஆலந்தூரில் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிப்பேன்: எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது தமீம் அன்சாரி வாக்குறுதி
2021-04-02@ 17:37:02

சென்னை: சென்னை ஆலந்தூர் தொகுதியில் அமமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் எம்.முகமது தமீம் அன்சாரி போட்டியிடுகிறார். இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி,வீதியாக சென்று குக்கர் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் வேட்பாளர் முகமது தமீம் அன்சாரி பேசுகையில்,“ஆலந்தூர் தொகுதில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஆலந்தூர்-ஆதம்பாக்கம் ரயில் தண்டவாளத்தை கடக்கும் சுரங்கப்பாதை. ஆலந்தூர்-கிண்டி பச்சையம்மன் கோயில் இடையிலான ரெயில் தண்டவாளத்தை கடக்கும் சுரங்கப்பாதை, பழவந்தாங்கல்-மீனம்பாக்கம் இடையிலான ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் சுரங்கப்பாதை உள்ளிட்ட திட்டப்பணிகளை விரைந்து முடிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பேன்.
அதேபோல் ஆலந்தூர்-வேளச்சேரி உள்வட்டச் சாலையில் தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதையில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் பல்லாண்டு கோரிக்கையையும் நிறைவேற்றுவேன். ஆலந்தூரை தூய்மையான நகராக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்” என்றார். பிரசாரத்தின் போது எஸ்.டி.பி.ஐ., அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Tags:
ஆலந்தூர் தொகுதிமேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
சொல்லிட்டாங்க...
'நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று நாம் சமத்துவம் பேசுவது தேச விரோதமா?'... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி
சொல்லிட்டாங்க...
அதிமுக அலுவலக சாவியை எடப்பாடியிடம் அளித்தது தவறு: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு
காங்கிரசில் நீக்கப்பட்ட குல்தீப் பிஸ்னோய் பாஜ.வுக்கு தாவல்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!