SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மந்திரியின் உறவினர் மீது விசாகா கமிஷன் அமைக்க கோரும் பெண் ஊழியர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-04-01@ 00:04:30

‘‘கமிஷனுக்கு ஆசைப்பட்டு பெண் அதிகாரி போடும் பேயாட்டத்தால்... கலங்கி போய் இருக்கும் ரேஷன் கடை ஊழியர்கள் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘காஞ்சிபுரத்தில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கீழ் 463 ரேஷன் கடைகளில் மாத விற்பனை ரூ.50 ஆயிரத்தை கூட தாண்டாதாம். இலவச அரிசியை வாங்கவே ரேஷன் அட்டைதாரர்களில் பலர் முன்வருவதில்லை. இந்த நிலையில் வெளி மார்க்கெட்டில் இருந்து பிராண்டிங் இல்லாத மளிகை பொருட்களை வாங்கி ரேஷன் கடைகளுக்கு அத்துைறையின் அதிகார மிக்க பெண்மணி அனுப்புகிறாராம். காரணம், அந்த கம்ெபனிகளிடம் இருந்து 20 பர்சன்ட் கமிஷன் கிடைக்கிறதாம்.

சர்க்கரை, கோதுமை உள்பட சில பொருட்களை மட்டுமே பொதுமக்கள் ரேஷனில் வாங்குகிறார்களாம். இந்த பொருட்களை சீண்டுவது கூட இல்லையாம். இதனால் கமிஷனுக்காக வாங்கப்பட்ட தரமற்ற பொருட்கள் தேங்கி, பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாம். அந்த பொருட்களை விற்க நடவடிக்கை எடுக்காத சரக மேலாளர்களையும் மரியாதை குறைவாக பேசி வறுத்தெடுக்கிறாராம். இவரை எதிர்க்க முடியாது என்பதால் கொதித்து போய் இருக்கிறார்கள். இதனால, விற்பனை ஆகாத கடலை மாவு, அரிசி மாவு, கோதுமை மாவு, பர்பி உள்ளிட்டவர்களை திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டும், இதுபற்றி குற்றப்புலனாய்வு துறையினர் தணிக்கை செய்து பண்டகசாலை முறைகேட்டை கண்டுபிடிக்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் கூட்டுறவு சங்க பதிவாளருக்கு கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நிர்வாக ரீதியாக ஒன்றியங்களை பிரித்ததால்... கட்சியில் புது கோஷ்டி உருவாகி தொண்டர்கள் இரண்டாக பிளவுப்பட்ட கதையை சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தொண்டைமான் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை ஒன்றியங்களை சிட்டிங் அமைச்சர் மூலமாக இலைகட்சி தலைமை திடீரென மூன்றாக பிரித்துள்ளதாம். தேர்தல் நேரத்தில் ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டதால் தலைமை மீதும், சிட்டிங் அமைச்சர் மீதும் இலைகட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளார்களாம்.. புதிதாக ஒன்றிய செயலாளர்களை தலைமை உருவாக்கியதால் நிர்வாகிகள் இடையே யார் பெருந்தலை என்ற மோதல் ஏற்பட்டுள்ளது. இது கோஷ்ட மோதலில் தொடங்கி கட்சி பிளவில் முடிந்துள்ளது.

இதனால் கந்தர்வக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதி இலைகட்சி வேட்பாளருக்கு பிரசாரம் செய்வதில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. தொகுதி மக்கள் மற்றும் கட்சியினருக்கும் அறிமுகம் இல்லாத வேட்பாளரை நிறுத்தி இருப்பதால் ஏற்கனவே மனவருத்தத்தில் இலைகட்சியினர் உள்ளனர். தற்போது ஒன்றியங்களை தலா 3 ஆக பிரித்து கட்சி விசுவாசிகளுக்கு பதவி வழங்காமல் கட்சியில் துரோகம் செய்தவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதால் இலைகட்சியினர் தொடர்ந்து தலைமை மீதும், சிட்டிங் அமைச்சர் மீதும் அதிருப்தியில் உள்ளனர். ‘‘ இலை தலைமை காசு வாங்கிக் கொண்டு போஸ்டிங் போட்டதால.. இலை நிர்வாகியை யாருக்குமே தெரியலையாம்..

இதனால தேர்தலில் யாரை நம்பி மக்கள் வாக்களிப்பாங்க என்று மாம்பழ வேட்பாளர், டென்ஷனான கதையை சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிரிவல மாவட்டம் வந்தவாசி தொகுதியில இலை கூட்டணியில, மாம்பழத்துக்கு சீட் கொடுத்திருக்காங்க. இந்நிலையில இலையோட, மாம்பழக்காரங்க தெள்ளார் ஒன்றியம் படூர் கிராமத்துல வாக்கு சேகரிக்க போயிருக்காங்க. அப்போ, அங்கிருந்த மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள், நல்லூர் கூட்டுறவு சங்கத்துல, கடனே கொடுக்குறது இல்ல.. வேண்டியவங்களுக்கு மட்டும் கடன் கொடுத்து தள்ளுபடி செஞ்சி, கணக்குல கொண்டுவந்துட்டாங்க. கூட்டுறவு சங்க தலைவர, எப்பவுமே பாக்கவே முடியலன்னு புகார் சொல்லத் தொடங்கிட்டாங்களாம்.

இதனால என்ன செய்றதுன்னு தெரியாம இலை கட்சிக்காரங்க திகைச்சுட்டாங்களாம். கொஞ்ச நேரத்துல அங்கிருந்த தொண்டர் ஒருவர், ‘இதோ நிற்கிறாரே, இவர் தான் சங்க தலைவர்’னு பொதுமக்கள் கிட்ட போட்டுக்கொடுத்துட்டாராம். உடனே அங்கிருந்த பெண்கள் இவரு யாரு... இந்த ஏரியாவுல பார்த்ததே இல்லையேன்னு புலம்பினாங்களாம்... இதை கேட்ட வேட்பாளர் இவரை நம்பியா தேர்தல் களம் இறங்கினோம்... இந்த ஒன்றியத்துல ஓட்டு கிடைக்குமா என்று புலம்பியபடி அந்த இடத்தில் இருந்து நகர்ந்தாராம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மந்திரியின் உறவினர் மீதும் விசாகா கமிட்டி அமைக்கிற நேரம் வந்துடுச்சாமே... கடல்ல மீன் பிடிக்கும் துறையை பார்க்க வேண்டியவர்....

துறையில பெண்களை ‘டச்’ பண்றாராம்... இதனால பெண்கள் அந்த அதிகாரியை பார்த்தா அலறியடித்து ஓடுறாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலூர் மண்டலத்தில் மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்கிறாராம். அவர் நான் எப்போது வீட்டிற்கு செல்கிறோமோ அப்போது தான் செல்ல வேண்டும் என்று பெண் ஊழியர்களை மிரட்டுகிறாராம். குறிப்பாக அலுவலக பெண் ஊழியர்களை வீட்டிற்கு செல்ல விடாமல் இரவு 8 மணி வரை கட்டாயப்படுத்தி வேலை வாங்குகிறாராம். பைலை முடித்து கொடுத்தால் மட்டுமே வீட்டிற்கு போக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாராம்.

இதனால், பெண் ஊழியர்கள் தங்களது குடும்பம் மற்றும் குழந்தைகளை கவனிக்க இயலாமல் ஒரு வித பயத்துடன், மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனராம். அதிகாரியின் அடவாடியால் பல பெண்கள் விவாகரத்து நிலைமைக்கு கொண்டு போய் விட்டுள்ளதாம். பெண் ஊழியர்கள் தற்கொலைக்கு செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக மகளிர் ஆணையத்துக்கு புகார் அனுப்பியிருப்பதாக தெரிகிறது. இவரு முன்னாள் மந்திரியின் உதவியாளராகவும்... இப்போது இருக்கும் மந்திரியின் உறவினர் என்ற கோதாவில் பெண்களிடம் இரவு நேரத்திலும் போன் செய்து டார்ச்சர் செய்கிறாராம். இந்த ஆதாரங்களை தொகுத்து புகாராக அனுப்பி, விசாகா கமிஷன் உத்தரவு போடுங்க என்று கடலூர் மீன்வளத்துறையில உள்ள பெண்கள் வேதனையோடு தெரிவிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்