SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பத்தாண்டை வீணடித்ததால் காலில் விழுந்து ஓட்டு கேட்கும் இலை தந்திரத்தை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2021-03-31@ 00:15:02

‘‘தன் வினை தன்னை சுடும் என்ற பழமொழி... தாமரை கட்சியை சேர்ந்த ஒருவருக்கு கட்சிதமாக பொருந்தி இருப்பதாக பேசிக்கிறாங்களே.. அது எந்த அளவுக்கு உண்மை...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடவுளுடன் நதி பெயரைக் குறிக்கும் மாவட்டத்தின் ‘‘ஐந்தெழுத்து’’ தொகுதியில் கடந்த ஓராண்டாக தேர்தலில் நிற்பதற்கான பணிகளை இலைக்கட்சியின் ‘‘மாவட்டமானவர்’’ தீவிர ஏற்பாடு செய்து வந்தாராம். இதனால் தாமரைக்கட்சியின் மூத்த தலைவரான ‘‘சர்ச்சை பேச்சு நாயகர்’’ குழப்பம் விளைவிக்கலாம் எனக்கருதி, அவரிடம் உரிய ‘‘கவனிப்பு’’ செய்து, ‘‘நீங்கள் இங்கே போட்டியிட்டால் தோல்விதான். பேசாமல் வேறு மாவட்ட தொகுதி கேட்டு செல்லுங்கள்...’’ என்று கூறியிருக்கிறார்.
அவரும், சரி என்ற தலையாட்டி விட்டு, திடீரென ‘‘பேக்’’ அடித்து, ஐந்தெழுத்து தொகுதியில் சீட் வாங்கி வேட்பாளராகி விட்டார். அந்த மாவட்டமானவரும் விதியே என நினைத்து தொகுதி மாறி, ‘‘கடவுள்-நதி’’ பெயருடைய தொகுதியில் நின்று திக்குமுக்காடி வருகிறாராம். அங்கே ஏற்கனவே துண்டு போட்டு வந்திருந்த அமைச்சருக்கு இதனால் சீட் கிடைக்கவில்லையாம்.. இதனால் அவரது ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.
இதனால் கடுப்பான மாவட்டமானவர், சர்ச்சை நாயகருடன் பிரசாரத்திற்கு செல்ல வேண்டாமென இலைக்கட்சியின் நிர்வாகிகளிடம் கூறி விட்டாராம்... அவர்களையும் தனது தொகுதிக்கு தேர்தல் வேலைக்கு வரச் சொல்லி விட்டாராம்... ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எம்பி தொகுதியை சர்ச்சை நாயகர் கேட்டு வாங்கியதால் ஏற்பட்ட முன்பகையையும் ‘‘மாவட்டமானவர்’’ தீர்த்து விட்டதாக பேசிக்கிறாங்க... எது எப்படியோ ‘‘கடவுள் நதி’’ மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதியாவது கிடைத்தது. இந்த முறை எதுவுமே தேறாது போலயே என இலைக்கட்சியினர் புலம்பி வருகின்றனராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சாதனைகளை ெசால்லி வாக்கு கேட்காமல் காலில் விழுந்து வாக்கு கேட்கும் இலையின் பரிதாப நிலையை பற்றிச் சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேர்தல்நாள் நெருங்க, நெருங்க இலை கூட்டணியின் பிரசார வியூகமே வேறுமாதிரி மாறி இருக்காம். பத்தாண்டு ஆட்சியில் எந்த திட்டமும் நடக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுவதற்கு பதில் அளிக்க முடியாமல் இலையும், அதன் கூட்டணிகளும் திக்கி திணறுதாம். இதனால் சென்டிமென்ட் பிட்டை போட்டு ஓட்டு கேட்க வேண்டும் என்பதுதான் அவர்களின் லேட்டஸ்ட் வியூகமாம். இதில் குறிப்பாக மாங்கனி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் இலையும், அதன் கூட்டணி வேட்பாளர்களும் ஓட்டு கேட்பதற்கு முன்பாகவே சட்டென்று பப்ளிக்கின் காலில் விழுந்து விடுகிறார்களாம். அவர்கள் காலில் விழுந்து எழுந்த பிறகு தான், ஓட்டுக்காக விழுந்தார் என்பது பப்ளிக்கிற்கே தெரியுதாம்.
‘‘மத்த கட்சிக்கு எப்படியோ, எங்க கட்சிக்கு எப்பவுமே சென்டிமென்ட் ரொம்ப முக்கியம். நல்லநேரம் பாக்குறது, ராகு காலத்தை ஒதுக்குறது போல, இந்த டெக்னிக்கும் நல்லா கை கொடுக்கும்’’ என்கின்றனர் இலையின் முக்கிய நிர்வாகிகள். இப்படித்தானே பத்து வருஷமா ஏமாத்தினீங்க? இந்த முறையும் நாங்க நம்புவோமா என்று அவர்கள் சென்ற பிறகு ஒலிக்கும் பப்ளிக் மைன்ட் வாய்ஸ் கண்டிப்பாக அவங்களுக்கு கேட்க வாய்ப்பில்லை என்கின்றனர் எதிர்க்கட்சியினர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கொரோனா வைரஸ் மீது கடும் கோபத்தில் இருக்கும் இலை கட்சி வேட்பாளர் பற்றி சொல்லுங்க...’’  என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கொரோனா  தொற்று காரணமாக, பூத்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் உயர்த்திவிட்டது.  இதுதான் இலை கட்சி வேட்பாளர்களை கடுப்பில் ஆழ்த்தி இருக்காம். அதாவது,  கூடுதல் பூத் கமிட்டிக்கும் சேர்த்து பணம் செட்டில் செய்யவேண்டிய உள்ளதாம்.  இதனால பட்ஜெட் பல மடங்கு உயர்ந்து போச்சாம். அதற்காக கடன் வாங்கலாமா...  வேறு செலவில் வைக்கும் அளவுக்கு கொரோனா வைரஸ் மீது இலை வேட்பாளர் கடும்  கோபத்தில் இருக்கிறாராம். உதாரணமாக, கோவை சூலூர் சட்டமன்ற தொகுதியில் பூத்  எண்ணிக்கை 463 ஆக உயர்த்தப்பட்டு விட்டது. முன்பு, இங்கு வெறும் 250 பூத்  மட்டுமே இருந்தது. அப்போது, பூத்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் கொடுத்து, தேர்தல்  பணியை மேற்கொள்ளும்படி இலை கட்சி வேட்பாளர் சொன்னாராம்.  
ஆனால், இப்போது  பூத்களின் எண்ணிக்கை டபுள் ஆகிவிட்டதால், எல்லா பூத்துக்கும் தலா ரூ.5  ஆயிரம் கொடுக்கவேண்டுமென்றால், ரூ.23.15 லட்சம் தேவையாம். இப்படி இரண்டு  மடங்கு வாக்குச்சாவடி எண்ணிக்கை உயர்ந்து உசிரை வாங்குதே.. பணத்துக்கு எங்கே  போவேன் என்று கட்சி வேட்பாளர் விழிபிதுங்குகிறார். எல்லாம் இந்த  கொரோனாவால வந்த வினை என்று சாபம் கொடுக்காத குறையாக பேசுகிறாராம். எனினும்  தொண்டர்கள் டீ, காபி, ஸ்நாக்ஸ், பெட்ரோல் செலவு என அடிப்படை தேவைக்குக்கூட  பூத் கமிட்டிக்கு பணம் தராவிட்டால், நாங்கள் எப்படி வேலைசெய்ய முடியும்...  நாங்க வேறு வேட்பாளரை நோக்கி போய்விடுவோம்னு மிரட்டுறாங்களாம்...’’ என்றார்  பீட்டர் மாமா.         

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்