SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கால் காயத்தை போஸ்டர் அடித்து போட்டு வீட்டில் இருந்தபடியே ஜெயிப்பேன் என கூறும் வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-03-29@ 01:29:55

‘‘வேட்பாளராக நிற்கும் ‘வைத்திய’ரு எங்கே போனாலும் பிரச்னையை பார்த்தால் எஸ்கேப் ஆகிடறாராமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சிய மாவட்டம் நாடு பெயர் கொண்ட தொகுதியில் இலைகட்சியை சேர்ந்த வேட்பாளராக ‘வைத்திய’மானவர் போட்டியிடுகிறார். புதூர்செல்லம்பட்டி கிராமத்தில் திறந்த ஜீப்பில் இருந்தபடி வாக்கு சேகரித்தார். அப்போது, மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல்கள், சீருடை, சைக்கிள், லேப்டாப் வழங்கியதாக பேசிக்கொண்டு இருந்தாராம்.
அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு மாணவி எனக்கு லேப்டாப்பெல்லாம்.. கொடுக்கலங்க என சத்தத்துடன் குரல் கொடுத்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ‘வைத்திய’மானவர் கொஞ்சம் அருகில் வந்து சொல்லும்மா என்றார். அருகில் சென்ற அந்த மாணவி, 2017-18ம் ஆண்டு நான் பிளஸ்2 படித்தேன். அப்போது யாருக்கும் லேப்டாப் தரவில்லை. இது தொடர்பாக போராட்டம், மனு கொடுத்தும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் லேப்டாப் தான் கிடைக்கல. இப்போது நான் கல்லூரியில் படிக்கிறேன் என ஆவேசமாக கூறினாராம். மாணவியின் இந்த பேச்சை கேட்டு பதில் அளிக்க முடியாமல் திணறிய ‘வைத்திய’மானவர், டெண்டர் கோளாறு காரணமாக இதுபோல் நடந்திருக்கலாம். நான் இதுபற்றி முழுமையாக விசாரிக்கிறேன் என மழுப்பலாக கூறினாராம். பதிலுக்கு அந்த மாணவியும் அடுத்த தேர்தலே வரபோகுதுங்க இனிமேல் நீங்க இதுபற்றி விசாரித்து லேப்டாப் கொடுக்க போறீங்களா என நக்கலா கேட்டாராம்.. இதனால் அப்செட்டில் பிரசாரத்தை பாதியில் முடித்துக்கொண்ட ‘வைத்திய’மானவர் அங்கிருந்து பிரசார வேனில் எஸ்கேப் ஆகி விட்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சின்ன காயத்துக்கு என்ன ‘பில்டப்’ என்று இலை கட்சி தொண்டர்களே சலித்து கொள்ளும் அளவுக்கு பந்தா காட்டும் வேட்பாளர் யாரு...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி இலை கட்சி வேட்பாளர் ‘அம்மன்’.. இவருக்கு காலில் திடீரென ஏற்பட்ட காயத்தால்.. தேர்தல் பிரசாரத்துக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறாராம். தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், இலை வேட்பாளர் வீட்டில் ஓய்வு எடுப்பது அக்கட்சி தொண்டர்களை சோர்வடைய செய்துள்ளது. பல நலன் விரும்பிகள், வேட்பாளரிடம் டெலிபோனில் தொடர்புகொண்டும், நேரில் சென்றும் நலம் விசாரிக்கின்றனர். அப்போது, ‘‘அண்ணே... எப்படியாவது சமாளித்துக்கொண்டு ஒரு வாரம் வாருங்கள்... அதன்பிறகு ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்...’’ எனக்கூறினர். அதற்கு அவர், ‘‘அட... போப்பா... என் காலில் கட்டு போட்டுக்கொண்டு இருக்கிறேன். அதை போட்டோ எடுத்து போஸ்டராக அச்சடித்து... தொகுதி முழுக்க ஒட்டினா நான் வீட்டில் உட்கார்ந்தபடியே ஜெயித்துடுவேன்னு தன் அடிபொடிகள் கிட்ட சொன்னதாக தகவல் ஓடிட்டு இருக்கு... அது உண்மையா... இல்லையா என்பது தெரியாத சாதாரண இலைநிர்வாகிகள் முழிக்கிறாங்க.  இந்த பதிலை கேட்டு, இலை தொண்டர்கள் திகைத்துப்போய்விட்டனர். ‘‘வேட்பாளர் நேரில் சென்று ஓட்டு கேட்டாலே நிலைமை மோசமாக உள்ளது, இதில், வேற இவர் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்கிறார்... எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியுமா...?’’ என அவர்கள் சலிப்பு தட்டுகின்றனர். தோல்வி பயம் காரணமாகவே, இப்படி வீட்டில் படுத்துக்கொண்டு, களத்தில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார் எனவும் கட்சிக்குள்ளேயே ஒரு தரப்பினர் கமென்ட் அடிக்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குமரி என்றாலே குழப்பம்தான் போலிருக்கே...’’ சிரித்தபடியே கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த முதல்வர் கோவளம் துறைமுக திட்டம் வராது என்று திட்டவட்டமாக கூறினாராம். அறிவிப்பு ஒருபுறம் இருக்க இந்த விஷயத்தில் அதிகாரிகள் விழிபிதுங்கி நிக்கிறாங்க. கோவளம் சரக்கு பெட்டக துறைமுகம் தொடர்பாக தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகம், குமரி மாவட்ட கலெக்டருக்கு இ-மெயிலில் அனுப்பிய கடிதம் சமூக வலைதளங்களில் வெளியானது. துறைமுகத்துக்கு டெண்டர் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் நேரத்தில் முக்கிய பேசும்பொருளாக மாறியுள்ள இந்த விஷயத்தில் இந்த கடிதம் எப்படி வெளியானது என்ற கேள்வி எழுந்ததும், தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டதற்கு பதில் அளித்து கடிதம் வழங்கியுள்ளதாக குமரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் மார்ச் 24ம் தேதியே குறிப்பிட்ட கடிதம் வெளியாகிவிட்ட நிலையில் அதே 24ம் தேதி ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டதாகவும், அதற்கு 26ம் தேதி பதில் அளிக்கப்பட்டதாம். அது தான் வெளியானதாக சொல்றாங்க. குழப்பமான கேள்வி என்னவென்றால், 26ம் தேதி வெளியிடப்பட்ட கடிதம் 24ம் தேதி எப்படி மற்றவர்கள் கையில் கிடைத்தது.. 24ம் தேதி கேள்வி கேட்டவருக்கு 26ம் தேதி பதில் அளித்த தகவல் அறியும் உரிமை சட்ட அலுவலரின் ‘வேகம்’ இன்னமும் மெய்சிலிர்க்க வைக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்