SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தபால் ஓட்டில் இலை தரப்பு செய்யும் தகிடுதத்தம் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2021-03-28@ 00:34:37

‘‘வாக்குரிமை இல்லாதவர்களுக்காக ‘நார்த் இண்டியன் டான்ஸ்’ பார்ட்டிய அழைத்து வந்து ‘ஷோ’ காட்டிய தாமரை வேட்பாளரு யாரு...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் எப்போதும் இல்லாத வகையில், இம்முறை கை, தாமரை, டார்ச் லைட் சின்னங்களை வைத்துள்ள கட்சிகளிடையே கடும் போட்டியாம். இத்தொகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகங்களை சார்ந்தவர்கள் ஓட்டு தாமரைக்கு கிடைக்காது அவங்க கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க. அதனால், அதுக்கு மாற்று ஐடியா வைத்துள்ள தாமரை தரப்பு வேட்பாளர் நூதன திட்டம் கொண்டு வந்தாராம். அதை பார்த்து அவரது கட்சிக்காரங்களே விழுந்து விழுந்து சிரிக்கிறாங்களாம். அதாவது, கோவை தெற்கு தொகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்களை நம் பக்கம் இழுத்துவிட வேண்டும் என தாமரை வேட்பாளர் ஐடியா போட்டு, வடமாநிலங்களில் இருந்து மகளிர் குழுவை வரவழைத்துள்ளார். இக்குழுவினர், அன்றாடம் தொகுதிக்குள் வலம் வந்து, நடனம் ஆடி, வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து, வாக்கு சேகரிக்கிறாங்க. இதுல சிரிக்காம.. சிந்திக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா... அந்த வடமாநில தொழிலாளர்களது பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லையாம். இவர்களுக்காக தான் ‘நார்த் இண்டியாவை சேர்ந்த லேடீஸ் டான்ஸ்’ குரூப்பை இறக்கினாங்களாம்... வடமாநில தொழிலாளர்களும் டான்ஸ் பார்த்துவிட்டு... எதுக்கு என்று தெரியாமலே வீடு போய் சேர்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எழுத்து கற்றுக் கொடுப்பவன் இறைவன் ஆவான் என்ற ஆன்றோர் மொழியை தமிழகத்தில் ஆளுங்கட்சி கேலிக் கூத்தாக்கின விஷயத்தை சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டத்துல எலெக்சன் பணி ஒதுக்கீட்டுல பல்வேறு குளறுபடி நடந்துருக்காம். குறிப்பாக, எழுத, படிக்க தெரியாத சமையலருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்து, அவங்களுக்கு கீழே எழுத கற்றக் கொடுக்கும் இறைவன் என்கிற ஆசிரியர்களை டம்மியாக்கிட்டாங்களாம்... மத்தவங்கள டம்மியாக்கிட்டாங்களாம். இதனால பொறுப்புக்கு தகுந்த வேலைய ஒதுக்கீடு பண்ணுங்கனு ஒரு தரப்பு கோவத்துல இருக்காங்க. இது ஒருபக்கம் இருக்க, தபால் ஓட்டுப் போட மிரட்டலும் வந்துருக்காம். அந்த மாவட்டத்துல நடந்த 2ம் கட்ட பயிற்சியில தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்ட எல்ேலாருக்கும் கொடுத்துருக்காங்க. இதுல முக்கிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும் சமையலர்கள் எல்லோரும், ஒருவித தடுமாற்றத்தோட இருக்காங்க. அதேசமயம், உதவிக்கு போற வாத்தியாருங்க கிட்ட, ஆளும்கட்சி கூட்டணி சார்ந்த சின்னங்களுக்கே எல்லோரும் ஓட்டுபோட சொல்றாங்களாம். ஒரே மாதிரி பயத்தோட சொன்னதால இதுகுறித்து வாத்தியாருங்க விசாரணை நடத்தியிருக்காங்க. அப்போது, ஒவ்வொரு பிடிஓக்களும், அந்தந்த யூனியன்ல இருக்குற கீழ் நிலை அங்கன்வாடி பணியாளர்கள மிரட்டி, ஆளும்கட்சி கூட்டணிக்குத்தான் எல்லோரும் ஓட்டு போடணும். அப்படி இல்லனு தெரிஞ்சா, அடிக்கடி ரெய்டுக்கு வந்து மெமோ கொடுத்துருவோம்னு மிரட்டும் தொனியில பேசியிருக்காங்க. இதனால ஆடிப்போய் ஒரே மாதிரி ஓட்டு போட வலியுறுத்திருக்காங்களாம்... இதனால ஆசிரியர்கள் கொதித்து போய் இருக்காங்க... அங்கன்வாடி மைய ஊழியர்கள் அதிர்ந்துபோய் இருக்காங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒரே போன் காலில்... கஞ்சா ஆசாமிகளை வாழ்த்தி அனுப்பிய காக்கிகள் யாரு... யாரு போன் செஞ்சா...’’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் இருந்து கடத்தப்படும் கஞ்சா சப்ளையில் மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள காட்பாடி பகுதிக்குதான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று போதை வியாபாரிகள் டீலிங் பேசி உள்ளார்களாம். இதனால் காட்பாடியில் கஞ்சா புழக்கமும், குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

இதேபோல் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் கிராமத்தில் 7 பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல் அவ்வழியாக சென்ற பெண்களை கிண்டல் செய்துள்ளனர். போலீசுக்கு தகவல் கொடுத்து ஒரு மணிநேரத்துக்கு மேலாகியும் யாரும் வரவில்லையாம். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கிராம மக்கள் அந்த கும்பலை சுற்றி வளைத்தனர். அப்போது ஓரளவு தெளிவாக இருந்த மூவர் தப்பி ஓடிட்டாங்க. ஆனால் போதையில் இருந்த நால்வர்த தப்பி ஓட முடியாமல் சிக்கிக் கொண்டனர். பொதுமக்கள் போதை ஆசாமிகளை காட்பாடி போலீசிலும் ஒப்படைச்சாங்க. ஸ்டேஷனுக்கு போன சிறிது நேரத்துலேயே மர்ம சிரிப்பு சிரித்தபடி போதை ஆசாமிகள் வெளியே வந்தாங்களாம்... இதற்கு போதை ஆசாமிகளை விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையத்துக்கு வந்த போன் கால்தான் காரணமாம். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நால்வரை விடுவிக்க சிபாரிசு செய்தவருக்கும், கஞ்சா கும்பலுக்கும் என்ன தொடர்பு இருக்கும்... எத்தனை லட்சம் லஞ்சமாக கை மாறிச்சு... பெண் குழந்தைகளின் பாதுகாப்பை போலீசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு கோட்டைவிடுவது சரியா என்று கொதித்து போய் உள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்