தர்மராயசாமி கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்
2021-03-23@ 00:32:35

பெங்களூரு: கர்நாடக மாநில அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கிவரும் வரலாற்று சிறப்புமிக்க பெங்களூரு தர்மராயசாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. பெங்களூரு உள்ள சிட்டி மார்க்கெட் பகுதியில் தர்மராயசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்படி இவ்வாண்டு மகாகும்பாபிஷேகம் நேற்று காலை யாகத்துடன் தொடங்கியது. 50க்கும் ேமற்பட்ட புரோகிதர்கள் வேத-மந்திரங்கள் ஓதி யாகம் தொடங்கினர். பின் கணபதி பூஜை, கலசப ஸ்தாபனம் உள்பட ஆகம விதிமுறைகள்படி நாள் முழுவதும் பூஜைகள் நடத்தப்பட்டது. இரண்டாவது நாளான இன்றும் அபிஷேக பூஜைகள் நடக்கிறது. நாளை பகல் மகாகும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் மாலை தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
மேலும் செய்திகள்
அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு; 7.11 லட்சம் பேர் தவிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 2,226 பேருக்கு கொரோனா.. 65 பேர் உயிரிழப்பு.. 2,202 பேர் குணமடைந்தனர்!!
மகளுக்கு முறைகேடாக வேலை மேற்கு வங்க அமைச்சரிடம் சிபிஐ 3ம் நாள் விசாரணை
நடிகர் விஜய் பாபுவை கைது செய்ய உதவுமாறு வெளிநாட்டு தூதரகங்களுக்கு கேரள போலீஸ் கடிதம்
ஜூனியர் என்டிஆர் படம் தீபிகா மறுத்தது ஏன்?
‘உன் பெயர் முகமது தானே...’ மனநிலை பாதித்தவரை தாக்கிய பாஜ நிர்வாகி: சடலமாக கிடந்ததால் பரபரப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்