துண்டான தலையில் உடலை வளர்த்த கடல் அட்டைகள்; விஞ்ஞானிகள் வியப்பு
2021-03-22@ 14:39:29

ஜப்பானில் உள்ள நாரா மகளிர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சாகோக்ளோசான் என்ற கடல் அட்டை குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.அப்போது ஒரு நாள், தங்கள் லேப்பில் இருந்த கண்ணாடி மீன் தொட்டியில், இருந்த ஒரு கடல் அட்டையின் தலை மட்டும் தனியே நீந்தியபடி இருந்தது. அதன் உடல் தனியே மிதந்து சில மணி நேரத்தில் இறந்துவிட்டது. ஆனால், தலை இறந்து விடாமல், மெல்ல மெல்ல தனது உடலை வளர்த்துக்கொண்டே வந்தது. அடுத்த சில நாட்களில், அந்த அட்டைக்கு, இதயம் உள்பட உடலின் அனைத்து உள் அங்கங்களும் கொண்ட புதிய உடல் முளைத்துவிட்டது.அட்டைகளுக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டது. அட்டைகள் உலகில் இப்படி ஒரு நிகழ்வு பதிவாவதும் இதுவே முதல் முறை என நாரா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.
Tags:
விஞ்ஞானிகள்மேலும் செய்திகள்
நிலவில் 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தகவல்!!
ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைகோள்: சீனா சாதனை
ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புது தகவல்: விண்கற்கள் எதனால் ஆனவை?
அணுக்கரு இணைப்பில் அதிக ஆற்றலை கொணர்ந்து சாதனை: ஐரோப்பிய விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி..!!!
2022ம் ஆண்டின் முதல் ராக்கெட் :பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட் 3 செயற்கைக்கோள்களுடன் பிப்.14-ல் விண்ணில் பாய்கிறது!!
கைவிடப்பட்ட ராக்கெட் வரும் மார்ச் 4ம் தேதி நிலவில் மோதுகிறது: ராக்கெட் மோதுவதால் நிலவில் பள்ளம் ஏற்படும் என நாசா தகவல்!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!