மூத்த தலைவர் சி.ஏ.குரியன் மறைவுக்கு முத்தரசன் இரங்கல்
2021-03-21@ 01:00:30

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ‘‘ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மூத்த தலைவரும் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னணித் தலைவருமான சி.ஏ.குரியன் (88) காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். மூணாறு, பீர்மேடு பகுதிகளிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாவலராக விளங்கியவர். கட்சியின் மாநில நிர்வாகக்குழு, தேசியக்குழு உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் என பல நிலைகளில் சிறப்பாக செயல்பட்டவர்.அன்னாரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வணக்கம் கூறி அஞ்சலி செலுத்துகிறது’ என கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
முதல் நாளே அதிரடி சோதனை; சென்னையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பு!!
சென்னை ராணி மேரி கல்லூரியில் மே 25ல் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
வரி குறைப்பு போதாது!: ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து மே 25 முதல் ஒரு வாரம் போராட்டம்..கம்யூ., விசிக கூட்டாக அறிவிப்பு..!!
ஒரகடம் அருகே ரூ.155 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை: ஒன்றிய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் ஆய்வு 300 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!