அரவக்குறிச்சி, திருவையாறு உள்பட 5 தொகுதியில் பாஜவை எதிர்த்து போட்டி: நிர்வாண கோலத்தில் மனுதாக்கல் அய்யாக்கண்ணு பேட்டி
2021-03-18@ 03:49:18

திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு திருச்சி யில் நேற்றுஅளித்த பேட்டி: கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வாரணாசி தொகுதியில் போட்டியிட போவதாக நாங்கள் அறிவித்தோம். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எங்களை அழைத்து பேசினார். அப்போது, ‘விளை பொருட்களுக்கு 2 மடங்கு விலை தர வேண்டும். கோதாவரி-காவிரி இணைப்பை திட்டத்தை அறிவித்து நிதி ஒதுக்க வேண்டும். ஒரு விவசாயிக்கு 3முதல் 5 லட்சம் வட்டியில்லா கடன் 5 ஆண்டு காலத்துக்கு வழங்க வேண்டும். இளைஞர்களை ஆண்மை இழக்க செய்யும், பெண்களை கருத்தரிக்காமல் செய்யும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை இறக்குமதி செய்யக்கூடாது’ என கோரிக்கைகளை முன்வைத்தோம்.
கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய பாஜக அரசு செவி சாக்கவில்லை. தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அரவக்குறிச்சி, திருவையாறு, தளி, திருவண்ணாமலை, திட்டக்குடி என பாஜக போட்டியிடும் ஆகிய 5 தொகுதிகளில் எங்கள் சங்கம் சார்பில் போட்டியிட உள்ளோம். நாளை (இன்று), மறுநாள் (நாளை) விவசாயிகளின் இன்றைய நிலையை உணர்த்தும் வகையில் நிர்வாண கோலத்தில் சென்று இந்த தொகுதிகளில் எங்கள் சங்க நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
வடக்கிபாளையம் பிரிவு மேம்பால பக்கவாட்டு சுவரில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
ஊழல் தலை விரித்தாடுகிறது: திட்டங்களை தட்டிப்பறிப்பதாக விவசாயிகள் வேதனை
தொடர் மழை எதிரொலி; ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: பொக்லைன் கொண்டு அகற்றம்
அந்தரத்தில் மிதந்தபடியே ஏரியின் எழிலை ரசிக்கலாம்: கொடைக்கானலில் ஜிப் லைன் சுற்றுலா அறிமுகம்
கீழடியில் இரும்பு துண்டுகள் உருக்கு கழிவுகள் கண்டெடுப்பு
இயற்கை எரிவாயு இணைப்புக்கு சேலத்தில் குழாய் பதிப்பு தீவிரம்: விரைவில் வீடுகளுக்கு வழங்க முடிவு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்