பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.95 ஆயிரம் பறிமுதல்
2021-03-16@ 14:26:19

திருப்பூர் : திருப்பூரில், உரிய ஆவணம் இல்லாமல் பனியன் நிறுவன உரிமையாளர் கொண்டு வந்த ரூ.95 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் நியமிக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு வரப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று காலை கணக்கம்பாளையம் பிரிவு பகுதியில் பறக்கும் படை அதிகாரி பழனிச்சாமி தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் திருமலைநகர் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் முனீஸ்வரன் (38) ஆவணங்கள் இல்லாமல் ரூ.95 ஆயிரத்து 200 கொண்டு வந்தது தெரிந்தது. இதனைத்தொடர்ந்து உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் கவுரியிடம் ஒப்படைத்தனர்.தொடர்ந்து இதற்கான ஆவணத்தை காட்டி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு முனீஸ்வரனிடம் அதிகாரிகள் அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர்.
மேலும் செய்திகள்
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை