SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைச்சர்கள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு

2021-03-16@ 00:28:43

சென்னை: தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த அமைச்சர்கள் தங்களின் சொத்து விவரம் அடங்கிய பட்டியலையும் கொடுத்துள்ளனர். அமைச்சர் தங்கமணி(குமாரபாளையம்): அசையும் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 1 லட்சத்து 3,256 என்றும், அசையா சொத்து ரூ.75லட்சத்து 78,250 என்றும் தெரிவித்துள்ளார். இந்த வகையில் அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 76 லட்சத்து 81,250 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமைச்சர் தங்கமணியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அமைச்சர் சரோஜா(ராசிபுரம்): ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலுவிடம், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் தனது அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 76 லட்சத்து 91,669 என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.33 லட்சத்து 37,000 என்றும் தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 10 லட்சத்து 28,669 என்று தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் கணவர் மற்றும் குடும்பத்தினர் பெயரில் சரோஜா ரூ.3 கோடி சொத்து மதிப்பை தாக்கல் செய்திருந்தார். அமைச்சர் அன்பழகன்(பாலக்கோடு): தனது பெயரில் அசையும் சொத்து ரூ.64,71,739, அசையும் சொத்து ரூ.55,00,000 மதிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மனைவி, மகன்கள், மகள் பெயரில் ரூ.1.50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன்(கோபிசெட்டிபாளையம்): கே.ஏ. செங்கோட்டையன் தனது பெயரில் ரூ.3 கோடியே 54 லட்சம் மதிப்பு சொத்தும், மனைவி பெயரில் ரூ.82 லட்சம் என மொத்தம் ரூ.4 கோடியே 36 லட்சம் மதிப்பில் சொத்துகள் உள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். நேற்று அளித்த மனுவில், மனைவி ஈஸ்வரி, மகன் இ.எஸ்.கதிர் ஆகியோர் பெயரில் அசையும் சொத்துகளாக ரூ.5 கோடியே 68 லட்சத்து 46 ஆயிரத்து 17, அசையா சொத்துகளாக ரூ.4 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.9 கோடியே 80 லட்சத்து 96 ஆயிரத்து 17 மதிப்பில் சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பிலான சொத்துகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் கடம்பூர் ராஜூ(கோவில்பட்டி): அமைச்சர் கடம்பூர் ராஜூ தனக்கு அசையும் சொத்தாக ரூ.32 லட்சத்து 18 ஆயிரத்து 661, அசையா சொத்தாக ரூ.15 லட்சம் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஓ.எஸ்.மணியன்(வேதாரண்யம்): ரொக்கமாக ரூ.4,84,983 உள்ளது. பல்வேறு வங்கிகளில் வைத்து சேமிப்பு பணம் என அசையும் சொத்துக்கள் ரூ.1.13 கோடி உள்ளது. 2016 தேர்தலில் அசையும் சொத்தாக ரூ.23,15,311 இருந்தது. நிலம், பூர்வீக சொத்து மதிப்பு ரூ.28,78,260.

செல்லூர் ராஜூ(மதுரை மேற்கு): அசையும் சொத்தாக செல்லூர் ராஜூ கையிருப்பு ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 650. மனைவி ஜெயந்தி கையிருப்பு ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 355. அவரிடம் 160 கிராம் தங்க நகைகள், மனைவியிடம் 400 கிராம் தங்க நகைகள், 3 கார்கள் உள்ளன. மொத்தம் சொத்து மதிப்பாக ரூ.6 கோடியே 42 லட்சத்து 73 ஆயிரத்து 355 என காண்பித்துள்ளார். கடந்த 2016 தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 18 லட்சத்து 89 ஆயிரத்து 415 எனவும், 2011 தேர்தலில் ரூ.51.83 லட்சம் என சொத்து மதிப்பு காண்பித்துள்ளார். கடந்த தேர்தலை விட அவரது சொத்து மதிப்பு 6 மடங்கு உயர்ந்துள்ளது.

அமைச்சர் உதயகுமார்(திருமங்கலம்): அமைச்சர் உதயகுமாரின் அசையும் சொத்து விவரம்: ரூ.7 லட்சத்து 37 ஆயிரத்து 552. மனைவி தாமரைச்செல்வி பெயரில் ரூ.14 லட்சத்து 25ஆயிரத்து 50. மகள் பிரியதர்சினி பெயரில் ரூ.29 லட்சத்து 57 ஆயிரத்து 623. உதயகுமாரின் அசையா சொத்து ரூ.2 லட்சத்து 20 ஆயிரம். மனைவி தாமரைச்செல்வியின் அசையா சொத்து ரூ.9 லட்சம், மகள் பிரியதர்சினிக்கு உள்ள அசையா சொத்து ரூ.1 கோடியே 8 லட்சம் (டிரஸ்ட்).

* 2 கிலோ தங்கம் வாங்கிய அமைச்சர் மகள்
தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.3.03 கோடி, மனைவி வித்யாதேவி பெயரில் ரூ.29.26 லட்சம் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் சுமார் 11 லட்சம் ரூபாய்க்கு அமைச்சர் வருமான வரி கணக்கு காட்டி உள்ளார். இவரது மனைவி 2020ல் 9 லட்சம் ரூபாய்க்கு வருமான கணக்கு காட்டியுள்ளார். 2019ல் 70.79 லட்சம் ரூபாய்க்கு வருமான வரி கணக்கு காட்டியிருக்கிறார். 2018ல் 8 லட்சம் ரூபாய்க்கு வருமான வரி தாக்கல் செய்துள்ளார். திடீரென வருமானம் அதிகரித்தும், வருமானம் குறைந்தும் கணக்கில் காட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் பெயரில் 80 கிராம் தங்கம், மனைவி பெயரில் 1360 கிராம் தங்கம், மகள் சாரங்கி பெயரில் 2,030 கிராம் தங்கம், மகன் பெயரில் 56 கிராம் தங்கம் இருகிறது. அமைச்சரின் மொத்த சொத்து மதிப்பு 3.03 கோடி ரூபாய். மனைவி பெயரில் 29.26 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகன், மகள் பெயரில் கடந்த 2016ம் ஆண்டில் சொத்து இல்லாமல் இருந்தது. தற்போது, சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மகள் பெயரில் சுமார் 2 கிலோ தங்கம் 5 ஆண்டில் வாங்கப்பட்டுள்ளது. கடந்த 2016ல் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து மதிப்பு ரூ.4.01 கோடி என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அது 3 கோடி ரூபாயாக குறைந்து விட்டது. கடந்த 2006ம் ஆண்டு எஸ்.பி.வேலுமணி முதல் முறையாக பேரூர் தொகுதியில் போட்டியிட்ட போது அவரின் சொத்து மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்