தமிழகத்தில் தென் கடலோர மாவட்டங்களில் மார்ச் 13-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
2021-03-09@ 15:53:45

சென்னை: தமிழகத்தில் தென் கடலோர மாவட்டங்களில் மார்ச் 13-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளது. அத்துடன் நாளை முதல் 13-ம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு ,பாபநாசம் பகுதியில் தலா 2 சென்டி மீட்டர் மழையும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, திருப்பதிசாரம், கன்னியாகுமரி, நாகர்கோவிலில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படும் என கூறியுள்ளது.
மேலும் செய்திகள்
வானிலை அறிவிப்பில் இந்தி திணிப்பு ! மத்திய அரசு அலுவலகங்கள் மூலம் தொடர்ந்து இந்தி திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!
தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 100-க்கும் மேல் வைரஸ் தொற்று: தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்குகிறது.. சுகாதாரத்துறை அறிக்கை
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் !
சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார் !
அண்ணா, காமராஜர் சாலை பெயர் மாற்றம் கண்டிக்கத்தக்கது: டிடிவி தினகரன்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்