அதிமுகவுக்கு அழிவு காலம் ஆரம்பம்.. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்சியை கலைத்துவிடுகிறோம் : தேமுதிக நிர்வாகி ஆவேசம்
2021-03-09@ 15:38:10

சென்னை : அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இத்தகைய சரியான முடிவை கட்சித் தலைமை தற்போது எடுத்துள்ளதாக தேமுதிக மாவட்ட செயலாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர் உள்ளாட்சி தேர்தலிலேயே தேமுதிகவை அதிமுகவினர் அவமானப்படுத்தியதாக தொண்டர்கள் குமுறுகின்றனர்.மேலும் அதிமுகவுக்கு அழிவு காலம் ஆரம்பம் என்றும் அதிமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டது தேமுதிகவுக்கு விடிவுகாலம் என்றும் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஒரு தேமுதிக நிர்வாகி ஒருவர் ஆவேசமாகப் பேசினார். அப்போது பேசிய அவர், “இந்தத் தேர்தலில் அதிமுகவை தேமுதிக முடித்துவைக்கும். தேமுதிகவை முதுகில் குத்தி எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார்கள். சசிகலாவுக்குச் செய்ததுபோல் எங்களுக்கும் செய்திருக்கிறார்கள். நான் அவர்கள் இருவருக்கும் சவால் விடுகிறேன். முடிந்தால் 2021 தேர்தலில் அதிமுக மட்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டால் தேமுதிக கட்சியைக் கலைத்துவிடுகிறோம். உங்களால் முடியுமா? விஜயகாந்துக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் யாரும் நன்றாக இருந்த சரித்திரம் இல்லை” என்றார்.
Tags:
அதிமுகமேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
கர்ணன் கொண்டாட வேண்டிய படம் கொடியன்குளம் கலவரம் அதிமுக ஆட்சியில் நடந்தது: உதயநிதி ஸ்டாலின் டிவிட்
அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
டெல்லிக்கு பயந்து எம்ஜிஆர் வைத்த பெயரை மாற்றும் அதிமுக ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என பெயர் மாறாவிட்டால் மே 2ம் தேதிக்கு பிறகு அதிகாரப்பூர்வ ஆணை: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
மேற்குவங்கத்தில் 8 பேரையாவது சுட்டு கொன்றிருக்க வேண்டும் என பேசிய பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹாவின் பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் தடை..!!
மும்முனை மின்சாரம் தேர்தல் முடிந்ததும் கட்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்