அதிமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது - அறப்போர் இயக்கம் புகார்
2021-03-09@ 15:00:52

சென்னை: அதிமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்று அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளனர். மின்சார கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்களை வெளியிட்டு அறப்போர் இயக்கம் புகார் கூறியுள்ளனர்.
ஒரு யூனிட்டுக்கான மின்சாரத்தை ரூ.2 முதல் ரூ.2.50 வரை கூடுதலாக விலை கொடுத்து தமிழக அரசு வாங்குகிறது. ஒரு நாளைக்கு 6.9 கோடி யூனிட் மின்சாரம் வாங்கப்படுகிறது என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டு வருகிறது.
ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2013 முதல் 2016 வரையிலான கால கட்டத்தில் ரூ.30,072 கோடியும் 2016 - 2021 கால கட்டத்தில் ரூ.24,325 கோடியும் மொத்தத்தில் ரூ.54,397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும், அமைச்சர் தங்கமணியும் முறைகேடு மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னும் 7 ஆண்டுகளில் இந்த இழப்பு ரூ.1 லட்சம் கோடியை எட்டும் என்றும் அறப்போர் இயக்கத்தினர் பேட்டி அளித்துள்ளனர்.
Tags:
மின்சார கொள்முதல்மேலும் செய்திகள்
கேரளாவில் இருந்து 30 வழியில் ஊடுருவுகின்றனர் குமரியில் கூடுதல் செக்போஸ்ட் அமைக்கப்படுமா?... கொரோனா பீதியில் மக்கள்
இரவு நேர ஊரடங்கால் முன் கூட்டியே பஸ்கள் நிறுத்தம்: பேருந்து நிலையங்களில் விடிய விடிய காத்திருந்த மக்கள்
முகக்கவசம் அணியாமல் சென்றதாக தமிழகம் முழுவதும் 4.60 லட்சம் வழக்குகள் பதிவு!: தமிழக காவல்துறை தகவல்
கொரோனா பரவல் எதிரொலி: சித்ரா பெர்ணமி அன்று திருவண்ணாமலையில் பக்தர்கள், பொதுமக்கள் கிரிவலம் செல்ல தடை
கருப்பு எள் கிலோ ரூ.8 உயர்ந்து ஏலம்-விவசாயிகள் மகிழ்ச்சி
திருவிழாக்கள் நடத்த அரசு அனுமதி மறுப்பால் பாதிப்பு தென்னங்கீற்று தொழிலாளர்கள் வறுமையில் வாடும் அவலநிலை
விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!
நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!