SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘‘அக்கா விலைவாசி ஏறிகிட்டே போகுது’’: அமித்ஷா பிரசாரத்தில் அதிர வைத்த பாடல்

2021-03-09@ 14:20:29

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அமித்ஷா வருவதற்கு முன்னதாக முக்கிய சந்திப்புகளில் மேளதாளங்கள் இசைக்கப்பட்டு பிரசார பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டது. நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் பெருமளவு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் ‘அக்கா ஏன் விலைவாசி எல்லாம் ஏறிக்கிட்டே போகுது?  பலாத்காரம் நடக்குது, அதுக்கு நம்ம ஆட்சி வந்தாதான் தீர்வு’ என்ற பாடலை இசைக்கவிட்ட வண்ணம் இருந்தனர்.

தற்போது காங்கிரஸ் ஆட்சி நடப்பது போலவும், பா.ஜ ஆட்சி வந்தால்தான் விலைவாசி குறையும் என்ற ரீதியில் இசைக்கப்பட்ட பாடலால் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். அவசர அவசரமாக அவர்கள் உடனே அந்த பாடலை நிறுத்த சொன்னார்கள். மத்தியிலும் நம்ம ஆட்சிதான்.. மாநிலத்தில் நம்ம கூட்டணி ஆட்சிதான்.. இந்த நேரத்தில இப்படி ஆப்பு வைக்கும் பாடலையா போடுவது என்று கடிந்து கொண்டனர். இதனால் பிரசாரத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்